12 வருஷமாக.. தினமும் 30 நிமிடம் மட்டுமே தூங்கும் நபர்.. காரணத்தை கேட்டா.. அசந்து போயிடுவீங்க!
சென்னை: ஜப்பானை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் வெறும் 30 நிமிடம் மட்டும் தூங்குவதை வழக்கமாக வைத்து உள்ளாராம்.
ஒரு சராசரி மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 6-8 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. நல்ல தூக்கம் இல்லாதது மனநிலையை, உடல்நிலையை சேர்ந்து பாதிக்கும். குறைந்த நேரம் தூங்கினால்.. உடலில் பல பாதிப்புகள் வரும்.

6-8 மணிநேரம் தொடர்ந்து தூங்குவது மனநிலை, அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சரியான தூக்க சுழற்சிதான் ஆரோக்கியமான உடல்நிலைக்கு அவசியம். இப்படி இருக்கத்தான்.. கடந்த 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் ஒரு மனிதர்.. மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
டெய்சுகே ஹோரி என்ற ஜப்பானியர் கடந்த 12 வருடங்களாக தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கி வருகிறார். இதற்கான காரணத்தை கேட்டால்தான் இன்னும் ஷாக் ஆவீர்கள். அதன்படி தனது வாழ்க்கையை "இரட்டிப்பாக்க" வேண்டும் என்று இப்படி தினமும் 30 நிமிடம் மட்டுமே தூங்குகிறார். குறைவாக தூங்கினால்.. ஆயுள் குறையும் என்பார்கள். அதற்கு எதிராக இவர் குறைவாக தூங்கி ஆயுளை அதிகரிக்கும் முடிவில் இருக்கிறாராம்.
ஜப்பானில் உள்ள ஹியோகோ மாகாணத்தைச் சேர்ந்த 40 வயதான அவர் தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்துடன் சாதாரணமாகச் செயல்பட பயிற்சி அளித்ததாகக் கூறினார். அதாவது குறைவாக தூங்கினாலும் உடல் வலி ஏற்படாது, மன பாதிப்பு ஏற்படாத வகையில் இவர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளாராம். இந்த நடைமுறை தனது பணித்திறனை மேம்படுத்துவதாகவும் அவர் கூறி உள்ளார்.
இதற்காக அவர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். அதோடு, சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் விளையாட்டு அல்லது காபி குடித்தல் போன்ற பழக்கத்தை தொடங்கலாம். இதன் மூலம் நீங்கள் தூக்கத்தை தடுக்கலாம்" என்று டெய்சுகே ஹோரி கூறி உள்ளார்.
ஹோரி, ஒரு தொழில்முனைவோர். அதிக நேரம் தூங்குவது அவசியம் இல்லை . 1 மணி நேரம், 30 நிமிடம் தூங்கினால் கூட போதும். ஆனால் ஆழ்ந்த உறக்கமாக இது இருக்க வேண்டும்,"தங்கள் வேலையில் தொடர்ந்து கவனம் தேவைப்படுபவர்கள் நீண்ட தூக்கத்தை விட ஆழ்ந்த தூக்கத்தால் அதிகம் பயனடைகிறார்கள். உதாரணமாக, மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குறுகிய ஓய்வு காலங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அதிக செயல்திறனைப் கொண்டு உள்ளனர். அவர்களை பார்த்த பின்பே நானும் தூக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று இப்படி செய்துள்ளேன் என்று டெய்சுகே ஹோரி கூறி உள்ளார்.
ஹோரியின் இந்த வித்தியாசமான பழக்கத்தை ஜப்பானின் மருத்துவர்களும் ஆய்வு செய்துள்ளனர். அதன்படி, தினமும் அவர் வெறும் 26 - 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கி.. அதன்பின் ஆற்றலுடன் எழுதியுள்ளார். 30 நிமிட தூக்கத்திற்கு பின் அவர் காலை உணவை சாப்பிட்டார். வேலை செய்ய சென்றார். மற்றும் ஜிம்மிற்கு சென்றார். அவர் கொஞ்சம் கூட சோம்பலாக இல்லை. இவர் தனக்கு ஆழ்ந்த..தூக்கம் வரும்.. கனவும் வரும்.. என்று கூறியுள்ளார். இதன் மூலம் தான் 100 வயதையும் தாண்டி இருப்பேன் என்று கூறியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications