சென்னையில் ஷாக்.. ஓடும் பஸ்சில்.. பெண்ணை பார்த்துக் கொண்டே.. அம்பலப்படுத்திய சின்மயி!

பஸ்சில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் குறித்து சின்மயியிடம் பெண் புகார் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓடும் பஸ்சில் இளம் பெண்ணை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ள ஆண் ஒருவரின் செயலை சின்மயி வெளிப்படுத்தி உள்ளார்.

சென்னையில் கேளம்பாக்கத்துக்கு பி19 என்ற பஸ் போய் கொண்டிருந்தது. அப்போது மதியம் 1.30. அதில் ஒரு பெண் ஏறியுள்ளார்.

டிக்கெட் வாங்கி கொண்டு, பஸ்ஸின் கடைசி சீட்டில் ஜன்னல் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். பிறகு ஹெட்போனை எடுத்து காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தார்.

கண்டுகொள்ளவில்லை

கண்டுகொள்ளவில்லை

ஆனால் கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தனக்கு எதிர்புறம் உள்ள ஜன்னல் சீட்டிலிருந்து தன்னை யாரோ ஒருவர் உற்று பார்ப்பதுபோல உணர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் அதை கண்டுகொள்ளவில்லை என்றாலும் ரொம்ப நேரத்துக்கு தன்னையே அந்த நபர் பார்ப்பது போல தெரிந்திருக்கிறது.

அருவெறுக்கத்தக்க செயல்

அருவெறுக்கத்தக்க செயல்

அதனால் டக்கென அந்த நபரை நோக்கி திரும்பினார் அந்த பெண். அப்போது பக்கத்தில் இருந்த சீட்டில் ஜன்னலோரத்தில் உட்கார்ந்து அந்த ஆண் பயணி, இந்த பெண்ணை பார்த்துக்கொண்டே பாலியல் ரீதியான அருவெறுக்கத்தக்க காரியத்தில் ஈடுபட்டு கொண்டிருந்திருக்கிறார்.

வீடியோ எடுத்தார்

வீடியோ எடுத்தார்

இப்படி தன்னை பார்த்து சுயஇன்பத்தில் ஒருவர் நடந்து கொண்டிருப்பதை பார்த்ததும் அந்த பெண் ரொம்பவும் அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வதென்றே தெரியாமல் பயந்து, திணறினார். பிறகு அந்த பெண், அந்த நபரின் செயலை மறைமுகமாக வீடியோ எடுத்துவிட்டார். அதை உடனடியாக சின்மயிக்கு அனுப்பி வைத்து, கூடவே நடந்த விவரத்தை எல்லாம் பதிவிட்டு சொன்னார்.

என்னதான் செய்வது?

என்னதான் செய்வது?

இந்த சம்பவத்தைதான் சின்மயி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "மதியம் 1.30 மணிக்கு கூட பெண்கள் சுதந்திரமாக, பயமில்லாமல் நடமாடக் கூடிய சூழல் உள்ளது. பல இடங்களில் இவ்வாறு நடந்தால், இதைதையும், இப்படி நடந்து கொள்பவர்களையும் எவ்வாறு தடுப்பது? என்னதான் செய்வது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஓடும் பேருந்து

ஓடும் பேருந்து

மேலும் இதுபோன்று உலகம் முழுவதும் நடப்பதாகவும், ஒரு பெண்ணால் இவற்றை எப்படி எதிர்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். சென்னையில் ஓடும் பேருந்தில் இளம்பெண் முன்பு, ஆண் ஒருவர் சுயஇன்பத்தில் ஈடுபட்டது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+