Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை விட்டு.. வெளியே வந்ததும் இனி மலைக்க போகிறீர்கள்! வருகிறது பிரம்மாண்ட மால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே மிகப்பெரிய பிரம்மாண்ட மால் கட்டப்பட்டு வருகிறது. அலுவலகம் + மால் என்ற வகையில் இந்த மால் காட்டப்படுகிறது.

6 மாடிகள் கொண்ட மால் கட்டப்படும். இது சிட்டி மால் என்று அழைக்கப்படுகிறது. அது போக 11 மாடிக்கு அலுவலக கட்டிடம் வர உள்ளது. இது போக பார்க்கிங் செய்ய 3 அண்டர் கிரவுண்ட் வர உள்ளது. இதற்கான கட்டுமானம் நடந்து வருகிறது. தற்போதைக்கு மாலின் அடிப்படை கட்டுமானம் மட்டும் முடிந்துள்ளது.

kilaampakkam chennai

சென்னையில் வரும் மால்: ஏற்கனவே சென்னையில் பல்வேறு பகுதிகளில் முக்கியமான மால்கள் கட்டப்பட்டு வரும் நிலையில் இன்னொரு முக்கிய மால் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பெரம்பூர் எஸ்பிஆர் சிட்டியில் உள்ள மால் ஆஃப் மெட்ராஸ் அமைக்கப்பட உள்ளது. 1.2 மில்லியன் சதுர அடியல் இந்த மால் அமைக்கப்பட உள்ளது. 5 மாடிகள் கொண்ட இந்த மாலில் 300 கடைகள் அமைக்கப்பட உள்ளன.

12 ஆங்கர் கடைகள் அமைக்கப்பட உள்ளது. அதேபோல் மொத்தமாக 9 திரை கொண்ட PVR மல்டிபிளக்ஸ் அமைக்கப்பட உள்ளன. 2 ஏக்கர் சென்ட்ரல் பிளாசா மார்க்கெட்டிங் & விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளது. அதேபோல் 3 நிலைகள் கொண்ட 1500 கார்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக கட்டுமானம் தற்போது தொடங்கி உள்ளது. ஏற்கனவே சென்னை அசோக் நகரில் பெரிய மால் வர உள்ளது. சென்னை அசோக் நகர் பகுதியில் மிகப்பெரிய 22 அடுக்கு மாடி கட்டப்பட்டு வருகிறது . இடையில் நிறுத்தப்பட்டு இருந்த கட்டுமானம் மீண்டும் தொடங்கி உள்ளது. வேகமாக சென்று வரும் கட்டுமானம் தற்போது 17 மாடிகளை கடந்து கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

சென்னையின் இந்த பகுதியில் பிரம்மாண்ட மால் வர உள்ளது. இதை யார் கட்டுகிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் ஷாக் ஆகிடுவீர்கள். தமிழ்நாடு அரசின் ஹவுசிங் போர்ட் மூலம் இந்த குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஒயின் கிளாஸ் வடிவத்தில் தோன்றும் 22-அடுக்கு அமைப்பு, அசோக் பில்லரில் உள்ள ட்ரை-ஜங்ஷன் ப்ளாட்டில் கட்டப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் சதுர அடி இடத்தில் 24,000 சதுர அடி அளவு கொண்ட மாலுக்கு ஒதுக்கப்படும். மற்ற பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு அமைக்கப்படும். ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்பின் அளவும் 1,700 சதுர அடி மற்றும் 2.13 ஏக்கர் நிலத்தில் முழு கட்டமைப்பையும் கட்ட 227.26 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுமானத்தில் தற்போது 10 மாடிகள் வரை கட்டப்பட்டு உள்ளது. ட்வின் டவர் என்பதால் இன்னொரு டவரும் உடன் கட்டப்பட உள்ளது. மீதம் உள்ள மாடிகளின் கட்டுமானம் தற்போது நடந்து வருகிறது. இங்கே மால் வருவதால் இனி உதயம் தியேட்டர் வியாபாரம் பெரிய அளவில் இருக்காது. இந்த நிலையில்தான் சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதற்கு அருகிலேயேதான் ஹவுசிங் போர்ட் கட்டும் மால் வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+