இந்த தம்பிக்கு தீபாவளி பரிசு தருமா சென்னை போலீஸ்.. வீடியோ வெளியிட்டு நெட்டிசன் எழுப்பிய கேள்வி
சென்னை: இந்த தம்பிக்கு தீபாவளி பரிசு தருமாறு தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன் என நெட்டிசன் ஒருவர் சாகச வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை வரும் ஞாயிறு அன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது.. தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு விற்பனை மாநிலம் முழுவதும் களைகட்டியுள்ளது. பட்டாசுகளை குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் ஆர்வமுடன் வாங்கி வெடித்து வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் இனிமேல் தான் பலரும் பட்டாசுகள் வாங்குவார்கள் என்பதால், பட்டாசு கடைகளில் விற்பனை குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.. இந்த தீபாவளியை பலரும் உற்சாக கொண்டாடும் நிலையில், வழக்கம் போல் சிலர் சேட்டையும் செய்கிறார்கள்.
ரேஸில் ஈடுபட்டபடி பட்டாசு வெடிப்பது, கையில் பட்டாசு வெடிப்பது போன்ற பல்வேறு சேட்டைகளை செய்து வருகிறார்கள். ஒரு இளைஞர், எந்த ஊரில் என்று சரியாக தெரியவில்லை.. ராக்கெட் பட்டாசுகளை வாகனத்தின் முன்பகுதியில் வைத்து பறக்க விட்ட வெடிக்கிறார். அதுவும் எப்படி வாகனத்தை வீலிங் செய்தபடி, ராக்கெட் பட்டாசுகளை வெடிக்கிறார். இந்த காட்சிகள் சமூக வலைதள பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது..
இந்த தம்பிக்கு தீபாவளி பரிசு தருமாறு தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்! 🙏🏻 @tnpoliceoffl @ChennaiTraffic @chennaipolice_ pic.twitter.com/crFt3hN4aM
— டைனோசர் 🦖 (@DinosaurOffcial) November 9, 2023
வீலிங் செய்வது, ரேஸில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அப்படி செய்பவர்கள் எப்போது வீடியோ எடுத்திருந்தாலும் கண்டிப்பாக சிக்கினால் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. இந்த சூழலில் இந்த தம்பிக்கு தீபாவளி பரிசு தருமாறு தமிழ்நாடு காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன் என நெட்டிசன் ஒருவர், பட்டாசு வெடித்த இளைஞரின் சாகச வீடியோ வெளியிட்டு கோரிக்கை வைத்துள்ளார். தமிழக காவல்துறை, சென்னை போலீஸை டேக் செய்து அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
கொஞ்சம் அசந்தால் உயிரையே பறித்துவிடும் பட்டாசுகளை மோட்டார் சைக்கிளின் முன்புறத்தில் வைத்து வீலிங் செய்தபடி, வெடிக்க வைத்த இளைஞரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. வாகன பதிவெண்ணை வைத்து நடவடிக்கை எடுத்தால் தான், பைக் சாகசம் என்ற பெயரில் இதுபோன்ற சேட்டை செய்வோருக்கு பாடமாக இருக்கும் என்கிறார்கள் நெட்டிசன்கள். மாணவர்கள், இளைஞர்கள் எந்த காரணம் பைக் சாகத்தில் ஈடுபடக்கூடாது, பட்டாசுகளை சாகசத்திற்காக கைகளில் வெடிக்கக்கூடாது. அது அவர்களுக்கு மட்டுமல்ல.. சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லது ஆகும்.












Click it and Unblock the Notifications