இத்தனை வருஷத்துக்கு பிறகு ஒரே ஒரு கேள்வி.. மொத்த ஒருவன் ஒருவன் முதலாளி பாடலும் சோலி முடிஞ்சு போச்சு
சென்னை: ஒரே கேள்வி தான்.. மொத்த ஒருவன் ஒருவன் முதலாளி பாடலும் சோலி முடிஞ்சு போச்சு.. இதில் நடிச்ச ரஜினிக்கும், பாட்டை எழுதிய வைரமுத்துவுக்கும், பாடிய எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கும், இயக்கிய கேஎஸ் ரவிக்குமாருக்குமே இது கண்டிப்பாக ஆச்சர்யமாக இருக்கலாம்.. நீங்களே பாருங்க..
சமூக வலைதளங்களில் புதிதாக ஒரு விஷயம் டிரெண்ட் ஆகி வருகிறது. பழைய படங்களின் காட்சிகளை கிண்டல் செய்வது, பல படங்களின் பாடல் வரிகளின் அர்த்தம் இதுதான் என்று விளக்கம் அளிப்பது. பழைய படங்களில் உள்ள மிஸ்டேக்குகளை கிண்டல் செய்வது போன்றவை அதிகரித்துள்ளது. பாடல்களில உள்ள இரட்டை அர்த்தம் முதல், சீரியஸான விஷயம் வரை பல விஷயங்கள் தினமும் இப்போது பேசப்படுகிறது.

1995ம் ஆண்டு ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு, ராதாரவி, வடிவேலு, காந்திமதி, பொன்வன்னண் உள்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் முத்து.. இந்த படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது. இதில் ரஜினிகாந்த்துக்காக ஓபனிங் பாடலாக ஒருவன் ஒருவன் முதலாளி என்ற பாடல் வரும்.
அந்த பாடலின் வரிகள் இப்படி இருக்கும்...
"ஒருவன் ஒருவன் முதலாளி,
உலகில் மற்றவன் தொழிலாளி.
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு" என்று வரும்..
~பூமியை வெல்ல ஆயுதம் எதற்க்கு
— குருநாதா (@gurunaatha) September 21, 2023
குதிரை~கைல என்ன தலைவா? pic.twitter.com/au1ZPxFTF7
இந்த பாடல் சுமார் 28 வருடங்களாக பலருக்கும் பிடித்தமான பாடல் ஆகும். இந்த பாடலில் "பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு" என்று ரஜினிகாந்த் சாரட் வண்டியில் பாடியபடி வரும் போது, கையில் குதிரையை விரட்ட சாட்டை கம்பு வைத்திருப்பார். இதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி உள்ள நெட்டிசன் ஒருவர். பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு என்று பாடுறீங்க.. அப்போது குதிரை கைல என்ன தலைவா? என உங்களை பார்த்து இப்படி கேட்கும்..என்று கூறியுள்ளார்.
இந்த கேள்வி படத்தில் நடிச்ச ரஜினிக்கும், பாட்டை எழுதிய வைரமுத்துவுக்கும், பாடிய எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கும், இயக்கிய கேஎஸ் ரவிக்குமாருக்குமே இது கண்டிப்பாக ஆச்சர்யமாக இருக்கும். எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications