ஒரு சொம்பு ரூ.30 லட்சம்! தொட்டா தீ பிடிக்கும்! கோவையை குறிவைத்த "புதையல் சொம்பு".. கொங்கு ஸ்கேம் 2.0
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு முறைகேடுகள், Scam எனப்படும் ஏமாற்று வேலைகள் அவ்வப்போது டிரெண்டாவது வழக்கம். இதை எல்லாம் வைத்துதான் சதுரங்க வேட்டை என்ற படம் கூட வந்தது. இப்போது அந்த சதுரங்க வேட்டையில் வருவதை போலவே புதியதொரு ஏமாற்று வேலை மக்கள் இடையே பரவி வருகிறது.
மக்களும் இதை நம்பி கோடி கோடியாக பணத்தை கொட்ட தொடங்கி உள்ளனர். அது என்ன ஸ்கேம்? வாருங்கள் பார்க்கலாம்.

பொதுவாக ஈமு கோழி முறைகேடு தொடங்கி ரைஸ் புல்லிங் முறைகேடு வரை எல்லாமே பெரும்பாலும் கொங்கு மண்டலத்தை குறி வைத்துதான் நடந்து உள்ளது. இங்கே உள்ளவர்களிடம் அதிக பணம் உள்ளது. இவர்கள் அதிகம் முதலீடு செய்யும் குணம் கொண்டவர்கள். பக்தி உள்ளிட்ட நம்பிக்கைகள் கொண்டவர்கள்.
இந்த மூன்று புள்ளியையும் இணைத்துதான் முறைகேடுகள் நடக்கின்றன. உதாரணமாக ரைஸ் புல்லிங் முறைகேட்டில் கோவிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் கலசத்தை வைத்து, பொய்யாக ரைஸ் புல்லிங் செய்வது போன்ற காந்த கலசத்தை விற்பனை செய்து லட்சம் லட்சமாக ஏமாற்றுவார்கள்.
கடவுள் பக்தி + பவர் கிடைக்கும் + பணம் வரும் என்ற விஷயங்களை ஒன்றாக சேர்த்துதான் இது போன்ற முறைகேடுகள் செய்யப்படுகின்றன. அந்த வகையில்தான் தற்போது புதிய ஸ்கேம் ஒன்று கொங்கில் டிரெண்டாகி வருகிறது.
ராமர் சொம்பு: அதன்படி ராமர் காலத்து சொம்பு என்ற சொம்பு ஒன்று மக்கள் இடையே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது ராமர் பயன்படுத்திய சொம்புகள் 12 உள்ளன. இவை இப்போது கிடைத்துள்ளன. தமிழ்நாட்டில் இருந்து இலங்கை சென்ற போது அவர் பயன்படுத்திய சொம்பு இவை.
இதை பயன்படுத்தி தண்ணீர் குடித்தால் உங்களின் சொத்துக்கள் பெருகும். நீங்கள் கோடீஸ்வரர்கள் ஆக முடியும். உங்கள் ஆரோக்கியம் உயரும். ஒரே நாளில் நீங்கள் சக்ரவர்த்தியாக முடியும் என்று கூறி கொங்கு மண்டலத்தில் இந்த சொம்பு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சொம்பு ரூபாய் 30 லட்சத்திற்கு கூட விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது 30 லட்சத்திற்கு இதை வாங்குங்கள்.. உங்கள் 30 கோடி கொட்டும் என்று கூறி விற்பனை செய்கின்றனர். பித்தளை பாத்திரத்தில் வெடி மருந்தையும் சில கெமிக்கல்களை கலந்து இதில் ராமர் வரைபடங்களை வரைந்தும் உள்ளனர். இதனால் தீ குச்சியை இதன் அருகிலேயே கொண்டு சென்றால் தீ பிடிக்கிறது.
இதை வைத்து பாருங்கள் இதன் பவரை.. நெருப்பை உருவாக்கும் அளவிற்கு பவர் கொண்டது இது என்று வித்தை காட்டி 30 லட்சம் ரூபாய்க்கு சொம்பு விற்பனை செய்கின்றனர். கொங்கு மண்டலத்தில் இதையும் பலர் நம்பி வாங்கி வருகின்றனர்.
காயின்: அதேபோல் ராமர் பயன்படுத்திய காயின், தகடு என்றும் கூறி விற்பனை செய்து வருகின்றனர். இதேபோல்தான் அதையும் உருவாக்கி உள்ளனர். பித்தளை பாத்திரத்தில் வெடி மருந்தையும் சில கெமிக்கல்களை கலந்து இதில் ராமர் வரைபடங்களை வரைந்தும் உள்ளனர். இதில் தீ குச்சியை காட்டி அதை தீ பிடிக்க வைத்து.. அதன்பின் விற்பனை செய்து வருகின்றனர்.
இதில் உங்கள் பெயரை அருகில் வைத்து பூஜை செய்தால் கோடிகள் கொட்டும் என்று கூறி ஏமாற்றி வருகின்றனர்.
இதான் அந்த ராமர் காயின்/ரைஸ் புல்லிங் ஸ்கேம் கொங்கு பகுதில இப்பவும் நடந்துட்டு இருக்க ஸ்கேம்.. ராமர் தர்பார் காயின்னு வடக்குலயும் இது பேமஸ் ஸ்கேம்..! pic.twitter.com/wc4x60F6bt
— iRoBo_V3.0 (@iRoBo_V3) August 22, 2023
இந்த வீடியோ ஒரு ஸ்கேம் கும்பலோட வீடியோ..! இந்த ஸ்கேம்தான் இப்போதைக்கு கோவை,தேனி,மதுரைல கொடி கட்டி பறக்குது..! ராமர் காயின்,புதையல் சொம்புனு பல பேர்கள்ள சுத்திட்டு இருக்கு..! இந்த சொம்ப எப்படியும் 30 லட்சத்துக்கு வித்துறுவானுங்க,ராமர் காயின் 10 டூ 15 லட்சம், ஈரோடு பக்கம் எல்லாம்… https://t.co/Lu5O6rkmjy
— iRoBo_V3.0 (@iRoBo_V3) August 21, 2023
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications