அனுபவசாலிகள் இல்லாத கட்சி தேறாது.. நடிகர் ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை.. விஜயின் தவெக மீது அட்டாக்கா?
சென்னை: மதுரை எம்பி சு வெங்கடேஷன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவல் வெற்றி விழா கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெற்றி விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கருணாநிதி புத்தக வெளியீட்டு விழாவில் ஓல்டு ஸ்டூடன்ஸ் என பேசியது ஏன் என்பது பற்றி விளக்கம் அளித்தார். அதோடு அனுபவசாலிகள் இல்லாமல் எந்த இயக்கமும், கட்சியும் தேறாது என்று பேசினார். இதனால் நடிகர் விஜயின் தவெகவை ‛அட்டாக்' செய்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை எம்பியாக இருப்பவர் சு வெங்கடேஷன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர் ‛வீரயுக நாயகன் வேள்பாரி' எனும் நாவலை எழுதினார். இந்த நாவல்ஒரு லட்சம் பிரதிகளை கடந்ததை கொண்டாடும் வகையில் வெற்றி விழா இன்று நடந்தது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் இந்த விழா நடந்தது. இதில் தமிழ்நாடு நிதித்துறை செயலாளர் உதயசந்திரன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பல மாதங்களுக்கு முன்பு இதே கலைவாணர் அரங்கில் எவ வேலு கலைஞர் பற்றி எழுதிய புத்தகத்தை ரிலீஸ் செய்தார். எல்லோரும் வந்து இருந்தாங்க. ஐஏஎஸ், ஐபிஎஸ், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என்று அனைவரும் வந்திருந்தாங்க.. எல்லோரும் நண்பர்கள் தானே. அங்கு நான் பேசும்போது ஓல்டு ஸ்டூடென்ஸ் எல்லாரையும் சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம். அவர்கள் பள்ளி வகுப்பறையை விட்டு செல்லமாட்டார்கள் என்று கூறினேன்
அதே சமயம், 'அப்படியிருந்தாலும் பழைய ஸ்டூடெண்டுகள் எல்லோரும் தூண்கள். அவர்கள் பவுண்டேஷன். அனுபவம் அதிகம் கொண்டவர்கள்.
அந்த மாதிரி அனுபவசாலிகள் இல்லை என்று சொன்னால் எந்த இயக்கமும், எந்த கட்சியும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமல்ல. சிகரங்கள் கூட அந்த மாதிரி சொல்ல வேண்டு என்று நினைத்து இருந்தேன்.
ஆனால் அங்கு சிரிப்பு எழுந்தது. அதில் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். என்னடா இது.. அதனால் வரும்போதே கவனமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். சரியாக பேச வேண்டும் என நினைத்தேன். மிஸ்டர் ரஜினிகாந்த் இந்த மாதிரி ஏதுவும் மிஸ்டேக் பண்ணிவிடாதே என்று தான் இங்கு வந்தேன்'' என்றார்.
ரஜினிகாந்த் இன்றைய பேச்சில் அனுபவசாலிகள் இல்லை என்றால் எந்த இயக்கமும், கட்சியும் தேறாது என்று கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது. தற்போது நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி ஓராண்டை நிறைவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் அவரது கட்சி களமிறங்குகிறது. அவரது கட்சியில் அரசியல் அனுபவம் கொண்டவர்கள் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று அனுபவசாலிகள் இல்லை என்றால் எந்த இயக்கமும், கட்சியும் தேறாது என்று பேசி உள்ளார். இதனால் அவர் விஜயின் தவெகவை சீண்டி உள்ளாரா என்று சமூக வலைதளங்களில் சிலர் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications