தேர்தல் நேரத்தில் விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம்! ஹைகோர்ட்டுக்கு ஓடிய காங்கிரஸ்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய வருகை தரும் போது, அதிகார துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும் வகையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என, காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக காங்கிரஸ் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அனுப்பிய மனுவில், பிரதமர் நரேந்திர மோடி, இன்று முதல் ஜூன் 1ம் தேதி வரை கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களவைக்கான கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்கு சேகரிக்கும் உள்நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும், விவேகானந்தர் பாறை, பகவதியம்மன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை தடுக்க கூடாது எனவும், வியாபாரிகள் கடைகளை மூடும்படி வற்புறுத்தக் கூடாது எனவும் உத்தரவிடக் கோரியும் காங்கிரஸ் வழக்கறிஞர் அணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த போது, பதிவுத்துறை அதை ஏற்க மறுத்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், இந்த வழக்கை தாக்கல் செய்ய அனுமதியளிக்க வேண்டும். அல்லது, உயர் நீதிமன்றம் இந்த மனுவின் அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications