ஓஹோ இதுதான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையா.. வைரலாகும் புகைப்படம்.. கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: விஜயகாந்தை மரியாதை நிமித்தமாகவும் உடல்நலம் விசாரிக்கவும் மட்டுமே சந்தித்ததாக கோயல் கூறிய நிலையில் தற்போது பின்வாசலில் கோயலும் சுதீஷும் பேசும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் தேமுதிக பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இந்த நிலையில் தேமுதிகவை எப்படியாவது அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என பாஜகவுக்கு அதிமுக அசைன்மென்ட் கொடுத்தது.
அதன்படி சென்னையில் அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து கொண்ட பியூஷ் கோயல் நேராக விஜயகாந்தின் வீட்டுக்கு சென்றார். அங்கு விஜயகாந்துடன் பேசிவிட்டு வெளியே வந்த கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.

கூட்டணி
அப்போது அவர் கூறுகையில் விஜயகாந்தை மரியாதை நிமித்தமாகவும் உடல்நலம் விசாரிக்கவும் சந்தித்ததாக கோயல் தெரிவித்திருந்தார். கூட்டணி குறித்து பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

மனித உறவு
அதற்கு அவர், இந்த சந்திப்பிற்கு பின் எந்த அரசியலும் கிடையாது. எப்போதும் எல்லா சந்திப்பிலும் அரசியல் பேச வேண்டும் என்பதில்லை. தனிப்பட்ட மனித உறவுகளுக்காகவும் ஒருவரையொருவர் சந்தித்து கொள்வதுண்டு.

சுதீஷுடன் பேசும் புகைப்படம்
அதன்படி விஜயகாந்தின் உடல் நலம் குறித்து மட்டுமே நாங்கள் பேசினோம் என்று கூறினார். ஆனால் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் பின்வாசலில் பியூஷ் கோயல், சுதீஷுடன் பேசும் புகைப்படம் உள்ளது.

நெட்டிசன்கள் கிண்டல்
கேட்டுக்கு உள் ஒரு பெண்ணின் கை தெரிகிறது. அது பிரேமலதாவா இல்லை தமிழிசையா என தெரியவில்லை. முன்வாசல் வழியாக வந்து விஜயகாந்தை நலம் விசாரித்த கோயல் அண்ட் கோ பின்வாசலில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

படம் பார்த்து கதை
அதிலும் இந்த புகைப்படத்தை பார்க்கும்போது ஏம்ப்பா சட்டுபுட்டுனு சீக்கிரம் ஏதாவது ஒரு முடிவுக்கு சொல்லுங்க. நான் டெல்லிக்கு போகணும், அமித்ஷா வைவாரு என்பதை போல் உள்ளது என நெட்டிசன்கள் கிண்டல் செய்கின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications