சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் சுத்த தமிழில் வர்ணனை செய்த நபர் யார்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!
சென்னை: சென்னை மக்களே கொஞ்சம் ஃபன் பண்ணலாமா, உங்கள் குடைகளை தூக்கி நான் ரைட் என சொல்லும் போது வலது பக்கமும் லெப்ட் என சொல்லும்போது இடது பக்கமும் அசைக்கலாமா, எனக்கு ஒரு ஓ போடலாமா ப்ளீஸ் என சென்னை மெரினா சாகச நிகழ்ச்சியில் சுத்தமான தமிழில் பேசி ஒருவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமான படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி இன்று காலை 11 மணி வரை முதல் 1 மணி வரை நடைபெற்றது.

விமான சாகச நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இதையொட்டி பொதுப் பணித் துறை சார்பில் மெரினா கடற்கரை மணல் பரப்பில் 15-க்கும் மேற்பட்ட சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்காக எந்தவித கட்டணத்தையும் பொதுமக்களிடம் பெறவில்லை. இதை காண எந்த டிக்கெட்டும் கிடையாது. வாகனங்களை நிறுத்த மட்டுமே பாஸ் தேவை. மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றன.
விமான சாகச நிகழ்ச்சியில் ஸ்டண்ட் ஷோக்களையும் இந்திய விமானப்படை செய்கிறது. விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி, சாரங் ஹெலிகாப்டர்கள், சுகோய் 30 எம்கேஐ, மிராஜ் 2000, மிக் 29, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ் உள்ளிட்டவையும் இடம்பெற்றன.
முதலில் பாராசூட் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் நடத்திய பாதுகாப்பு ஒத்திகைகளும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வுக்கு வருவோர் குடை, தண்ணீர் பாட்டில், தேவையான உணவு ஆகியவற்றை கொண்டு வருமாறு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்த சாகச நிகழ்ச்சியின் போது சுகோய் விமானங்கள், சூர்யகிரண் உள்ளிட்ட விமானங்கள் வானில் தீபாவளி பட்டாசு போல் நெருப்பை கக்கிக் கொண்டு சென்றன. நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் முடிவு வரை ஒரு ஆணும், பெண்ணும் நிகழ்ச்சியை ஆங்கிலத்திலும் தமிழிலும் தொகுத்து வழங்கினார்கள். ஏற்கெனவே விமானங்கள் வானில் சீறி பாய்ந்து வந்த நிலையில் இவர்களின் தொகுத்து வழங்கும் முறையும் கணீர் குரலும் பார்வையாளர்களை கவர்ந்தது.
நிகழ்ச்சியின் முடிவில் சென்னை மக்களே கொஞ்சம் ஃபன் பண்ணலாமா, உங்கள் குடைகளை தூக்கி நான் ரைட் என சொல்லும் போது வலது பக்கமும் லெப்ட் என சொல்லும்போது இடது பக்கமும் அசைக்கலாமா, எனக்கு ஒரு ஓ போடலாமா ப்ளீஸ் என கூறி அழகான தமிழில் பேசியிருந்தார். லேசாக ஆங்கிலம் கலந்தது போல் இருந்தாலும் தூய தமிழிலும் சில இடங்களில் வர்ணனை செய்தது அனைவரையும் கவர்ந்தது.
அவர் இந்திய விமான படையை சேர்ந்த பைலட்! அவர்தான் இந்த நிகழ்வை வர்ணனை செய்தது தெரியவந்தது. ஏற்ற, இறக்கத்துடன் எங்கு நிறுத்த வேண்டுமோ அங்கு நிறுத்தி, நிதானித்து மிகவும் அழகாக பேசினார். அது போல் பெண் விமானி ஒருவரும் அவர் பின்னால் நின்றிருந்தார். அவர் யாரென்று தெரியவில்லை, மேலும் பெண் வர்ணனையாளர் யார் என்பது குறித்த விவரங்களும் தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications