Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போச்சு.. நமது சூரிய குடும்பத்தில் ஒரு கிரகத்தை காணோமாம்.. குட்டி கிரகத்தை துரத்தி விட்ட வியாழன்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நமது சூரிய குடும்பத்தில் ஒரு காலத்தில் ஒன்பதாவது கிரகம் இருந்திருக்கலாம் என்றும், ப்ளூட்டோ அல்லாத வேறு ஒரு கிரகம் வியாழனால் வெளியேற்றப்பட்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

சூரிய குடும்பத்தில் ஒன்பதாவது கிரகம் - ஒரு மர்மம்

தற்போது, நமது சூரிய குடும்பத்தில் எட்டு கிரகங்கள் உள்ளன. ப்ளூட்டோ ஒரு காலத்தில் ஒன்பதாவது கிரகமாக இருந்தது, ஆனால் அது பின்னர் கிரகம் இல்லை தரம் குறைக்கப்பட்டது. இருப்பினும், சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு காலத்தில் ப்ளூட்டோ அல்லாத வேறு ஒன்பதாவது கிரகம் இருந்தது என்று கூறுகின்றனர், குறிப்பாக சூரிய குடும்பத்தின் ஆரம்ப நாட்களில் அந்த 9வது கிரகம் இருந்திருக்கலாம். பின்னர் அது காணாமல் போய் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

A planet is missing from our Solar system Do you know what happened to it

விஞ்ஞானிகள் கோட்பாட்டின்படி, வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் மற்றும் இன்னும் ஒரு மர்மமான கிரகம் என மொத்தம் ஐந்து வாயு கிரகங்கள் இருந்தன. ஆனால் அந்த ஐந்தாவது கிரகம் இப்போது இல்லை.

அது எங்கே சென்றது?

பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வியாழனின் மிகப்பெரிய ஈர்ப்பு விசையால் அந்த கிரகத்தின் சுற்றுப்பாதையில் தடங்கல், பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். இதனால் அது சூரிய குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கலாம். இந்த மர்மமான கிரகம் யுரேனஸ் அல்லது நெப்டியூன் போன்ற ஒரு பனிக்கட்டி நிறைந்த வாயு கிரகமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில விஞ்ஞானிகள் இது ப்ளூட்டோவிற்கு அப்பால் உள்ள "கிரகம் ஒன்பது" என்று நம்புகின்றனர். ஆனால் இப்போது சூரிய குடும்பத்தில் இருந்து அது காணாமல் போய்விட்டதாக நம்புகின்றனர்.

"ஜம்பிங் ஜூபிடர்" கோட்பாடு

"ஜம்பிங் ஜூபிடர்" எனப்படும் ஒரு கோட்பாட்டுடன் இந்த புதிய கோட்பாடு ஒத்துப்போவதாக கூறப்படுகிறது. அதாவது வியாழன் உருவான பிறகு ஒரே இடத்தில் தங்கவில்லை என்று அந்த கோட்பாடு கூறுகிறது. அது சூரியனை நோக்கி வேறு வேறு சுற்றுப்பாதைகளில் சுற்றி இருக்கிறது. அவ்வப்போது திடீர் மாற்றங்களில் நகர்ந்து மற்ற கிரகங்களை தொந்தரவு செய்துள்ளது. அதாவது இப்போது சுற்றுவது போல் வியாழன் நீள்வட்ட பாதையில் சுற்றவில்லை. மாறாக அவ்வப்போது.. சுற்றுப்பாதையை மாற்றி இருக்கிறது.

இந்த சம்பவத்தால்.. 9வது கிரகமாக இருந்த கிரகங்களில் ஒன்று விண்வெளியில் வீசப்பட்டிருக்கலாம். அதாவது சூரிய குடும்பத்தை விட்டே வெளியே வீசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வியாழன் முதலில் சூரியனில் இருந்து 3.5 AU (வானியல் அலகுகள்) தூரத்தில் உருவானது என்றும், 1.5 AU க்கு உள்நோக்கி நகர்ந்து பின்னர் பின்னோக்கி நகர்ந்தது என்றும் கூறுகிறது. இந்த நகர்வு காரணமாக அந்த 9வது கிரகம் சூரிய குடும்பத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

2011 ஆம் ஆண்டில், பூமி மற்றும் செவ்வாய் கிரகங்களின் சுற்றுப்பாதைகள் ஆய்வு செய்த பின்பும், 2015 ஆம் ஆண்டில், கனடிய விஞ்ஞானிகள் வியாழன் மற்றும் சனியைச் சுற்றியுள்ள நிலவுகளின் சுற்றுப்பாதைகளை ஆய்வு செய்த பின்பும் இந்த கோட்பாடு உருவாக்கப்பட்டது. அதாவது இந்த ஆய்வுகளின் மூலம் கூடுதலாக ஒரு கிரகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

சமயங்களில்.. அந்த கிரகம் இன்னும் நமது சூரிய குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் கருதப்படுகிறது. சூரியனில் இருந்து சுமார் 400 முதல் 800 AU தொலைவில் அந்த கிரகம் இருக்கலாம் என்கிறார்களா (ப்ளூட்டோ வெறும் 30 முதல் 50 AU தொலைவில் உள்ளது). நெப்டியூன் கிரகத்திற்கு அப்பால் உள்ள கைப்பர் பெல்ட்டில் உள்ள பொருட்களில் காணப்படும் அசாதாரண இயக்கங்கள் காரணமாக அந்த கிரகம் அங்கு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

அது "ஜம்பிங் ஜூபிடர்" காரணமாக வெளியேற்றப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த கருத்து வெறும் கோட்பாடு மட்டுமே. இன்னும் இதை உறுதி செய்யும் முழுமையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+