கோட்டையும் கொடியும் நொடியில் மாறும்.. டிரம்ப்பை வைத்து போஸ்டரில் கலக்கிய விஜய் ரசிகர்கள்.. செம!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கோட்டையும் கொடியும் நொடியில் மாறும் நீங்கள் அரசியலுக்கு வந்தால் என நடிகர் விஜய்யை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியலுக்கு கைப்பிடித்து அழைப்பது போன்ற ஒரு போஸ்டர் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளனர். அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு தனது மகன் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அந்த எண்ணத்தில்தான் கமல் 60 விழாவில் ரஜினியும் கமலும் அரசியலில் ஒன்றிணைய வேண்டும். பின்னர் தம்பிகளுக்கு வழி விட வேண்டும் என சந்திரசேகரன் தெரிவித்தார். இது விஜய்க்கு எஸ்ஏசி சீட்டு பிடித்து வைப்பது போல் இருந்தது.

வெளியீட்டு விழா

வெளியீட்டு விழா

இந்த நிலையில் மெர்சல், சர்கார், பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் வசனங்களால் மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்த விஜய், இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிலும் கடுமையாக பேசினார். இந்த நிலையில் நெய்வேலியில் நடந்த படப்பிடிப்பு போது வருமான வரித் துறை அதிகாரிகளின் சோதனைக்குள்ளானார். இதனால் ரசிகர்கள் கொந்தளித்தனர்.

வருமான வரி

வருமான வரி

விஜய் வருமான வரியை சரியாக செலுத்துவார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியிருக்கையில் இதுபோன்ற ஒரு சோதனையால் தினந்தோறும் மாஸ்டர் ஷூட்டிங் நடக்கும் நெய்வேலிக்கு ரசிகர்கள் படையெடுத்தனர். அப்போது அங்கிருந்த வேன் மீதும், பேருந்து மீதும் ஏறிய விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டார்.

கலங்கி நிற்கும் தமிழகம்

கலங்கி நிற்கும் தமிழகம்

இதையடுத்து நடிகர் விஜய், தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் இருக்கும் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படம் சென்னையில் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஆந்திராவை நாங்கள் காப்பாற்றிவிட்டோம், கலங்கி நிற்கும் தமிழ்நாட்டை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும், மக்கள் நலன் கருதி களமிறங்குங்கள் என இருந்தது. இதில் பிரசாந்தும் ஜெகன்மோகனும் நடிகர் விஜயிடம் கோரிக்கை வைப்பது போல் படத்தை அட்டகாசமாக உருவாக்கியிருந்தனர்.

நொடியில் மாறும்

நொடியில் மாறும்

இந்த போஸ்டர் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு போஸ்டர் வைரலாகியுள்ளது. அதில் விஜய்யுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் இருப்பது போல் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் கோட்டையும் கொடியும் நொடியில் மாறும்! நீங்கள் அரசியலுக்கு வந்தால்! என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நடிகர் விஜய்யின் கைகளை பற்றிக் கொண்டு கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது.

கேள்வி

வைரலாகி வரும் இந்த போஸ்டரால் அரசியலில் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே நடிகர் விஜய்யை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி காங்கிரஸுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் இது போல் அடுத்தடுத்த போஸ்டர்களால் விஜய் அரசியலுக்கு இழுக்கப்படுவாரா இல்லை பொறுமைக் காப்பாரா என்பது கேள்வியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+