சின்ன பார்சலே 15 கோடி ரூபாய் சார்.. அயர்ன் சூர்யாவுக்கே அண்ணன்.. சென்னை ஏர்போர்ட்டே ஆடிப்போச்சு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையில் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகும்.. இங்கு லட்சக்கணக்கான பயணிகள் ஆண்டு தோறும் பயணிக்கிறார்கள். 24 மணி நேரமும் மிகவும் பிஸியான விமான நிலையமாக உள்ள சென்னையில் போதைப்பொருள் கடத்துவோரை பிடிக்கவும், தங்கம் கடத்துவோரை பிடிக்கவும் அதிநவீன முறையில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தொழில் மேற்கொள்வது சவாலான ஒன்றாக உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையில் இந்தியாவில் உள்ள மிக முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாகும்.. இங்கு லட்சக்கணான பயணிகள் ஆண்டு தோறும் பயணிக்கிறார்கள். 24 மணி நேரமும் மிகவும் பிஸியான விமான நிலையமாக உள்ள சென்னையில் போதைப்பொருள் கடத்துவோரை பிடிக்கவும், தங்கம் கடத்துவோரை பிடிக்கவும் அதிநவீன முறையில் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தொழில் மேற்கொள்வது சவாலான ஒன்றாக உள்ளது.

இப்படியான சூழலில் சிங்கப்பூரில் இருந்து வரும் ஒரு பயணி, பெரும் அளவில் போதை பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது ஒவ்வொரு பயணியாக சோதித்த போது, இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த அகமது இட்ரீஸ் (வயது 28) என்பவர் சுற்றுலா விசாவில் லாவோஸ் நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து சென்னை வந்திருந்தார்.. அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த போது பலமுறை தாய்லாந்து, எத்தியோப்பியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சுற்றுலா பயணி விசாவில் அடிக்கடி சென்னை வந்து விட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, இந்தோனேசியா பயணி மீது சந்தேகம் அடைந்த மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் அவரை தீவிரமாக விசாரித்தனர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், சுங்க இலாகா அலுவலக அறைக்கு அழைத்து சென்று அவரது உடைமைகள் மற்றும் உள்ளாடைகளை சோதனையிட்டனர்.
உள்ளாடைக்குள் சிறிய பார்சல் ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அதை பிரித்து பார்த்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், போதைப் பவுடர் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பயணி அகமது இட்ரீஸ் அதிகாரிகளிடம் அது போதைப்பொருள் அல்ல, உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்து பவுடர் என்று கூறி பிடிவாதமாக பேசி வந்தார். 3 கிலோ பவுடரை எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்த போது உயர் ரக கொக்கைன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது.
இது தொடர்பாக இந்தோனேசிய பயணி அகமது இட்ரீசை கைது செய்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தோனேசிய பயணி அகமது இட்ரீ. சுற்றுலா பயணி விசாவில் அடிக்கடி சென்னை வந்து விட்டு சென்றதால், இதேபோல் போதை பொருள் கடத்தி வந்தாரா.. இவர் சர்வதேச போதை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா என்று அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications