உங்கள் வாகனம் மட்டுமா.. அங்கே தமிழ் அல்லவா இருக்கிறது.. ஆனந்த் மகிந்திராவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில்
சென்னை: மூப்பில்லா தமிழே தாயே எனும் தமிழ் கீதத்தை பாராட்டிய ஆனந்த் மகிந்திராவுக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் நன்றி கூறியுள்ளார்.
தமிழ்ப் புத்தாண்டு அதாவது சித்திரை மாதம் 1 ஆம் தேதியை கொண்டாடும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த வாரம் "மூப்பில்லா தமிழே தாயே" என கீதத்தை வெளியிட்டுள்ளார்.
மார்ச் 24 ஆம் தேதி துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் ரஹ்மானின் கச்சேரியில் இது காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அது போல் மாஜாவின் யூடியூப் சேனலில் பிரத்யேகமாக ஒளிபரப்பப்பட்டது.

மூப்பில்லா தமிழே தாயே
மூப்பில்லா தமிழே தாயே என தொடங்கும் இந்த பாடலின் பெயருக்கு ஏற்ப உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியின் புகழை குறிக்கும் வகையில் இந்த பாடல் எழுதப்பட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் கவிஞர் தாமரை எழுதியுள்ளார். பழங்கால தமிழ் பண்பாட்டையும் உலகெங்கிலும் வியாபித்து இருக்கும் தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்டு வரும் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.

ஏ ஆர் ரஹ்மானின் இசை
ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து தயாரித்துள்ள இந்த பாடலில் சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ. ஆர். அமீன், அமீனா, கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் பூவையார் உள்ளிட்டோர் ரஹ்மானுடன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர். மாஜா தயாரித்துள்ள இந்த பாடலை Studio MOCA நிறுவனத்தின் அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

ஆனந்த் மகிந்திரா ட்வீட்
இந்த பாடல் குறித்து ஆனந்த் மகிந்திரா தமிழில் ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், இதில் இடம்பெற்றிருக்கும் ஜாவா பைக் என்று சொல்லப்பட்டதால் இதை முதலில் பார்த்தேன். இப்போது என்னால் பார்க்காமல் இருக்க முடியாது. அருமையான இசை மற்றும் வீடியோ என குறிப்பிட்டு ஏ.ஆர்.ரஹ்மானுக்கு டேக் செய்திருந்தார்.
Recommended Video

ஏ.ஆர். ரஹ்மான் பதில்
இதையடுத்து இந்த ட்வீட்டிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்ட ட்வீட்டில் மிக்க மகிழ்ச்சி! காணொளியில் உங்களுடைய வாகனம் மட்டுமன்று, ஒட்டுமொத்த உலகத்தையும் முன்னெடுத்துச் செல்லும் வாகனமாக 'மூப்பில்லா தமிழ்' இருக்கிறது
என்றும் சொல்கிறோம்! மிக்க நன்றி! என குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications