நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனது இல்லை.. அண்ணா பல்கலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேச்சு
சென்னை: நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனது கிடையாது என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கல்லூரி விழாவில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இவர் ஆஸ்கர் பெற்ற போது எல்லாப்புகழும் இறைவனுக்கே என்றார். அந்த அளவுக்கு கடவுள் நம்பிக்கையும் கொண்டவர்.

ஆங்கிலத்திற்கு இணைப்பு மொழி இந்தி என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய போது தமிழ்தான் இணைப்பு மொழி என உரக்க சொன்னவர் ஏ.ஆர்.ரஹ்மான். சமூகம் சார்ந்த விஷயங்களிலும் இவர் அவ்வப்போது கருத்து சொல்வதுண்டு.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வருகிறது. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டது. அதில் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. இந்த முதல் பாகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலுடன் இந்த கதை ஒத்து போகவில்லை என சிலர் அப்போது எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இயக்குநர் மணிரத்னமோ பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு அதில் உள்ள விஷயங்களை கமர்சியலாக சொல்லியுள்ளதாக விளக்கம் அளித்தார். இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டிருந்தது. அதில் இயக்குநர் மணிரத்னம் வென்றார். தற்போது இரண்டாவது பாகம் வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்தில் அக முக எனும் பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடல் ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. இதனால் அந்த பாடல் எப்படி படமாக்கியுள்ளார்கள் என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்த இரண்டாவது பாகம் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நீளம் கொண்டது என கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் PS2 Anthem வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது.
இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில் நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனதில்லை. ஆகவே எந்த கல்லூரிக்கு அழைத்தாலும் நான் மிகவும் உற்சாகமாகிவிடுவேன். இங்கு இருக்கும் மாணவர்கள்தான் நாளைய எதிர்காலம். அதை கட்டமைக்க போகிறவர்கள் இவர்கள்தான். விக்ரம் இந்த மேடையில் என்னுடைய பாடலை பாடினார்.
ஆனால் விக்ரம் நடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் இருந்து நான் தைரியத்தை எடுத்துக் கொண்டேன். ஒரு முறை விக்ரம் நடித்த கரிகாலன் கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு அவரை போலவே கத்தியெல்லாம் வைத்துக் கொண்டு நகைச்சுவை செய்து இருக்கிறேன். இந்த பாகத்திற்கான பின்னணி இசையை 3 ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டோம். இதை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியுள்ளோம்.
பாலி, லண்டன், துபாய், சென்னை, மும்பை ஆகிய இடங்களில் இந்த பாடலுக்காக வொர்க் செய்துள்ளோம். இந்த கீதம் மணி சாரின் ஐடியாதான். இந்தியில் அர்ஜித் சிங் பாடியுள்ளார், தமிழில் என்னை பாட சொன்னார்கள். இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பேசியுள்ளார். ஆஸ்கர் நாயகனாக இருந்தாலும் தான் கல்லூரிக்கு போனதில்லை, கல்லூரி படிப்பை படித்ததில்லை என்பதை கூறியது மாணவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications