ஆங்கிலத்தில் பேட்டி கேட்ட ஊடகங்கள்.. அமித் ஷா பெயரை சொல்லி திமுக எம்.பி ஆ.ராசா கொடுத்த Thug ரிப்ளை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பதில் கொடுத்தார் திமுக எம்.பி ஆ.ராசா. பேட்டி முடிந்த பிறகு, ஆங்கிலத்தில் தனியாகப் பேசுமாறு ஆங்கில ஊடகங்கள் கேட்ட நிலையில், ஆ.ராசா கொடுத்த ரிப்ளை கவனம் பெற்றுள்ளது.

சென்னையில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழில் பேட்டி அளித்து முடித்துவிட்டு நன்றி சொல்லிவிட்டு கிளம்ப ஆயத்தமானார் ஆ.ராசா.

A Raja s Sharp Retort to English Media During Press Meet After Reacting to Amit Shah s Speech

ஆ.ராசா கொடுத்த ரிப்ளை

அப்போது, ஆங்கில ஊடக செய்தியாளர்கள், ஆங்கிலத்திலும் தனியாகப் பேசுமாறு ஆ.ராசாவிடம் கேட்டனர். அதற்கு, ஆ.ராசா, "அமித் ஷா இந்தியில் பேசும்போது கீழே சப் டைட்டில் ஸ்க்ரோல் ஓடுகிறது. அதுபோல நான் தமிழில் பேசியதற்கு கீழே ஸ்க்ரோல் போடுங்க.. இதை நீங்க முயற்சித்துப் பாருங்கள்" என சிரித்தபடி கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

கலவரத்தை உருவாக்க முயல்கிறார் அமித் ஷா - ஆ.ராசா

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு பற்றி கடுமையாக சாடிப் பேசினார் ஆ.ராசா. ஆ.ராசா பேசுகையில், "நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து அவதூறுகளை அள்ளி வீசியுள்ளார் அமித் ஷா. அமைதியாக இருக்கும் மாநிலத்தில் கலவரத்தை தூண்டி சட்டம் ஒழுங்கை கெடுக்கப் பார்க்கிறார் அமித் ஷா. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதை அமித்ஷா விரும்பவில்லை. மதவாத பிளவை வேண்டுமென்று உருவாக்கி கலவரத்தை உருவாக்க பார்க்கிறார்.

அமித் ஷாவின் பேச்சை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் விரும்பவோ ஏற்கவோ மாட்டார்கள். அமித்ஷாவின் பேச்சு அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. பாஜகவின் எந்தவித மத அரசியலும் பிளவுவாத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. திமுகவிற்கு அச்சப்பட்டுதான் தமிழ்நாட்டுக்கு வந்து அமித்ஷா பேசியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்துள்ள நற்பெயரால் அச்சமடைந்துதான் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ளார் எனத் தெரிவித்தார்.

தமிழ் தமிழ் என்று பேசிவிட்டு

மேலும், தமிழ், தமிழ் என்று ஒன்றியம் உள்துறை அமைச்சர் பேசும்போது கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட மறுப்பது ஏன்? கீழடி ஆய்வறிக்கையை மீண்டும் மீண்டும் ஒன்றிய அரசு திருப்பி அனுப்புவது ஏன்?, தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், திராவிட சித்தாந்தத்துக்கு எதிரானவர்கள் என்பதை மீண்டும் மீண்டும் பாஜகவினர் நிரூபித்துள்ளனர். வட இந்தியாவில் பல மாநிலங்களில் புழக்கத்தில் இருந்த மொழிகளை பாஜக அரசு அழித்துவிட்டது. பல மொழிகளை அழித்து வட இந்தியாவில் இந்தியை பரப்புகின்றனர் என விமர்சித்தார் ஆ.ராசா.

பயமா? சிரிப்புதான் வருது

தொடர்ந்து பேசிய ஆ.ராசா, "திமுகவைப் பார்த்து ஷாக் அடித்துதான் பாஜகவினர் இங்கு வருகிறார்கள். அவர்களின் பிளவுவாதமும் மத அரசியலும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தமிழக மக்கள் முதல்வரின் பின்னால் இருக்கிறார்கள். இதனை ஜீரணிக்க முடியாமல்தான் பாஜகவினர் இங்கு வந்து பேசுகிறார்கள். எங்களுக்கு என்ன பயம்? அவர்களைப் பார்க்கும்போது சிரிப்பாகத்தான் வருகிறது.

மக்களவை தேர்தலின்போது பிரதமர் மோடி 5 முறை வந்தார். சுதந்திர இந்தியாவில் இதுபோன்று பிரதமர் 5 முறை ஒரு மாநிலத்திற்கு வந்த வரலாறு உள்ளதா? மோடியும், அமித் ஷாவும் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வர வேண்டும். அப்போதுதான் திமுகவிற்கான வாக்குகளும் அதிகரிக்கும். கடந்த மக்களவைத் தேர்தலில் எத்தனை முறை மோடி இங்கு வந்தாரோ நீலகிரி தொகுதியில் அவ்வளவுக்கும் வாக்குகள் அதிகரித்தது." எனப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+