ரெமல் இல்லை "ரிபல்".. ரிசல்ட் வரட்டும் இருக்கு.. எடப்பாடிக்கு எதிராக அதிமுகவில் மையம் கொண்ட "புயல்"
சென்னை: வங்கக்கடலில் ரெமல் என்ற புயல் உருவாகி வரும் நிலையில் அதிமுகவில் சத்தமே இல்லாமல் "ரிபல்" ஒன்று உருவாகி வருகிறதாம்.
தமிழ்நாட்டில் கோடை காலத்திற்கு இடையே கடுமையாக மழை பெய்து வருகிறது. அதன்படி 3 நாட்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்டு உள்ளது.

புயல் வருகிறது: இந்த மழைக்கு இடையே திடீரென வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. அடுத்த வாரம் திங்கள் - செவ்வாய் வாக்கில் இந்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. அடுத்த வாரம் இந்த தாழ்வு பகுதி புயலாக மாறி அதன்பின் சென்னை டூ தென் மாவட்டங்கள் வரை மொத்தமாக பரவலாக மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது இன்னும் சில நாட்களில் மாறி அதன்பின் புயலாக மாறும். இந்த புயலுக்கு ரெமல் புயல் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.
புயல்: இப்படி வங்கக்கடலில் ரெமல் என்ற புயல் உருவாகி வரும் அதே வேளையில் அதிமுகவில் சத்தமே இல்லாமல் "ரிபல்" ஒன்று உருவாகி வருகிறதாம்.
Rebel என்றால் கிளர்ச்சி.என்பார்கள் அப்படி ஒரு கிளர்ச்சிதான் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவில்.. முக்கியமாக கொங்கில் உருவாகிக்கொண்டு இருக்கிறதாம். லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்ததும்.. முக்கியமாக ஒருவேளை அதிமுக 5 இடங்களுக்கு குறைவான எம்பி சீட்டுகளை பெற்றால் கண்டிப்பாக அதிமுகவில் கிளர்ச்சி வெடிக்கலாம் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தினர்.
10 தோல்வி: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 9 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்துள்ளது.
இப்போது லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தால் அது அதிமுகவின் 10வது தொடர் தோல்வியாக அமையும். தென் மண்டலத்தில் வாக்குகளை இழந்தது, வடக்கு மண்டலத்தில் வலிமை இழந்தது, டெல்டாவில் பெரிய அளவில் சரிவை சந்தித்தது என்று அந்த கட்சி கடுமையான தோல்வியை தழுவி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்கு உள்ளேயே எதிர்ப்பு எழும் வாய்ப்புகள் உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொங்கு எதிர்ப்பு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கொங்கு பெல்ட் டீம் உருவாகிக்கொண்டு இருக்கிறது.
மணியான சிலர் எடப்பாடி பழனிசாமி மட்டும் தனியாக இருந்தால் கட்சி வெற்றிபெறாது. எல்லோரும் ஒன்று சேர வேண்டும். வெளியே சென்றவர்கள் உள்ளே வர வேண்டும். இல்லையென்றால் நமக்கும் எதிர்காலம் இருக்காது. கட்சி வென்றால்தான் நாம் சம்பாதிக்க முடியும். தனி தனியாக இருந்தால் அது முடியாது என்று முடிவு செய்துள்ளார்களாம்.
கொங்கில் ஒரு தலைவரின் தலைமையில் அதிமுகவில் தலைமையை மாற்றும் பணிகள் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் கூட எடப்பாடி பேட்டி தந்த அதே நேரத்தில் ஒரு கொங்கு லீடர் வேறு ஒரு இடத்தில் பேட்டி கொடுத்துக்கொண்டு இருந்தார். இதெல்லாம் எடப்பாடியை பெரிதாக ஒரு க்ரூப் மதிக்கவில்லை என்பதையே காட்டுவதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தீவிர மூவ்: இதை மனதில் வைத்தே சசிகலா - டிடிவி தினகரன் - ஓ பன்னீர்செல்வம் உடன் மணியான குழுவை சேர்ந்த சிலர் பேசி வருகிறார்களாம். கட்சியை மீட்டு ஒருமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் நம் எதிர்காலம் சரியாகும் என்று எடப்பாடிக்கு எதிராக சிலர் தீவிரமாக மூவ் செய்து வருகிறார்களாம்.
-
ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
சார், இது பேட்டரி வைக்கிற இடம்.. நாகர்கோவிலில் எடப்பாடி வேனில் சல்லடை போட்ட பறக்கும் படை அதிகாரிகள் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications