சென்னை விமான நிலையத்தில் எங்கு திரும்பினாலும் தெருநாய்கள்.. உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னை: சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிவதை காண முடிகிறது. இதனால் விமான நிலையம் வரும் பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இருசக்கர வாகனஙகளில் வருவோர் தெருநாய்களின் தொல்லையில் சிக்கி கொள்கிறார்கள். எங்கு திரும்பினாலும் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றுவதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கும், விமான நிலைய நிர்வாகத்திற்கும் நீண்ட காலப் பிரச்சனையாக நாய்கள் தொல்லை என்பது இந்து வருகிறது. சென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயில்கள், கார் பார்க்கிங் பகுதிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய இணைப்புப் பாதைகளில் தெருநாய்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் விட்டுச் செல்லும் உணவுப் பொருட்கள் மற்றும் அங்குள்ள உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சாப்பிடுவதற்காக தெருநாய்கள் அதிக அளவில் வருகின்றன. விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பரந்த காலியிடங்கள் நாய்கள் தங்குவதற்கு ஏதுவான இடங்களாக உள்ளதால் எளிதாக வந்துவிடுகின்றன.
அதிகாலை மற்றும் நள்ளிரவு நேரங்களில் வரும் பயணிகள், குறிப்பாகக் குழந்தைகளுடன் வருபவர்கள், நாய்கள் துரத்துவதால் மிகுந்த அச்சமடைகிறார்கள். இது இன்று நேற்று பிரச்சனை இல்லை.. காலம் காலமாக தொடர்கிறது. விமான நிலையத்தில் ஓடுதளப் பகுதிகளில் (Runway) நாய்கள் புகுந்துவிட்டால் அது விமானம் தரையிறங்குவதற்கும், டேக்-ஆஃப் செய்வதற்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். இப்படியான சூழலில் புகாரின் பேரில் அவ்வப்போது சென்னை விமான நிலைய ஆணையம் நாய்களை அவ்வப்போது பிடித்து விரட்டிவிடுகிறது. இப்போதும் அப்படி செய்யவேண்டிய நிலை வந்துள்ளது.
ஏனெனில் சென்னை விமான நிலையத்தில் எங்கு பார்த்தாலும் நாய்கள் கூட்டமாக நின்று, பயணிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது பயணிகள் கூறுகிறார்கள். நாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த இந்திய விமான நிலைய ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை விமான நிலைய இணையதளத்தில் பயணிகள் புகார்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு சென்னை விமான நிலையம் தரப்பில் இணையதளத்தில், குறிப்பிடப்பட்ட பதிலில், "விமான நிலையத்தில் நாய்கள் தொல்லை ஓரளவு இருக்கிறது. அதற்காக பயணிகளிடம் மன்னிப்பு கோருகிறோம். நாய் தொல்லையை கட்டுப்படுத்தவும், பயணிகளுக்கு நாய்களால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக நாய்களை கையாளுவதில் திறம்பட பயிற்சி பெற்ற சிலரை கொண்டு நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications