Coolie: கூலியை காலி செய்ய.. ரூ.20 கோடி செலவு செய்த டாப் நடிகர்? களமிறக்கப்பட்ட நெகட்டிவ் பி.ஆர்.. ஷாக்
சென்னை: சமீப காலமாக கோடம்பாக்கத்தில் அதிகம் பேசப்படும் விவகாரங்களில் ஒன்றாக, ரஜினிகாந்தின் 'கூலி' படத்திற்கு எதிராக நடைபெறும் எதிர்மறை PR பிரசார விவகாரம் மாறி உள்ளது. நடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான ஒரு போட்டி நடிகர் இந்த எதிர்மறை பிரச்சாரத்திற்காக சுமார் ₹20 கோடி செலவழித்ததாகத் தகவல் பரவி வருகிறது. கூலி படத்திற்கு எதிராக வெறுப்பை பரப்புவதற்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படம், திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்து இருந்தாலும் படம் மிகப்பெரிய அளவில் வடஇந்தியாவில் வரவேற்பை பெற்றுள்ளது.

Coolie படத்திற்கு தமிழ்நாட்டில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட இதுவரை 500 கோடிக்கு மேல் வசூல் பெற்று பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முக்கியமாக வடஇந்தியாவில் கூலி படத்திற்கான தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. வெளியாகி நான்கு நாட்களில் இந்தியாவில் மட்டும் ₹259.52 கோடி வசூலித்து, இந்த ஆக்ஷன் எண்டர்டெய்னர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது. ரஜினி-லோகேஷ் கூட்டணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரையரங்கு அனுபவத்தை வழங்கியுள்ளது.
எதிர்மறை பிரச்சாரம்
இப்படிப்பட்ட நிலையில்தான் கூலி படத்திற்கு எதிராக டாப் நடிகர் ஒருவர் நெகட்டிவ் பிஆரை களமிறக்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன. நடிகர் ரஜினிகாந்திற்கு எதிரான ஒரு போட்டி நடிகர் இந்த எதிர்மறை பிரச்சாரத்திற்காக சுமார் ₹20 கோடி செலவழித்ததாகத் தகவல் பரவி வருகிறது. கூலி படத்திற்கு எதிராக வெறுப்பை பரப்புவதற்காக மட்டும் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் கூலி படம் வெளியான சில மணி நேரங்களிலேயே, சிறிய மற்றும் பெரிய விமர்சகர்கள் பலர் 'கூலி' ஒரு தேவையற்ற முயற்சி என்றும் ரஜினியின் மிகப்பெரிய தோல்வி படம் இது என்றும் விமர்சிக்கத் தொடங்கினர். இதன் பின்னணியில் சதி இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்தின் செல்வாக்கால் பயந்து ஒரு போட்டி நடிகர், இந்த நெகட்டிவ் பிரச்சாரத்திற்காக ₹20 கோடி நிதி செலவிட்டதாக கூறப்படுகிறது.
Coolie விமர்சனம்
இந்த பணம் சமூக ஊடகங்களில் போலியான கணக்குகளை உருவாக்குதல், எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் போலியான லைக்குகள் மற்றும் டிஸ்லைக்குகளை உருவாக்குவதற்காக செலவிடப்பட்டதாகத் தெரிகிறது. திரைப்படத்தை ஒரு தோல்வியாகக் காட்ட இது திட்டமிடப்பட்ட சதி என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த சதித்திட்டம் எதிர்மறையாக மாறியுள்ளது. படத்தைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக, இந்த எதிர்மறை பிரச்சாரம் படத்திற்கு மேலும் கவனத்தை ஈர்த்தது. ரசிகர்கள் #CoolieBlockbuster போன்ற ஹேஷ்டேக்குகளைப் பிரபலப்படுத்தத் தொடங்கினர். பல நடுநிலை பார்வையாளர்கள், இந்த எதிர்மறை பிரசாரத்தின் உண்மையை அறிய, படம் பார்க்க திரையரங்குகளுக்குச் சென்றனர்.
கூலி விமர்சனம் - பின்னணியில் ஹீரோ
இந்த மோதல் பின்னால் உள்ள "டாப் நடிகர்" யார் என்பதை இதுவரை யாரும் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை என்றாலும் பலரும் அவரின் பெயரை குறிப்பிட்டும் விமர்சனங்களை செய்து வருகின்றன. Coolie படத்திற்கு தமிழ்நாட்டில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் பெற்று பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
'கூலி' திரைப்படம் இவ்வளவு எதிர்மறை பிரசாரம் இருந்தபோதிலும் பெரும் வசூலைக் குவித்து வருகிறது. அந்த நடிகரின் இந்த கீழ்த்தரமான இந்த செயல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூலி' திரைப்படம் வெளியான முதல் நாளான வியாழக்கிழமையன்று ₹65 கோடி வசூலித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கத்தைப் பெற்றது. இதில் தமிழகத்தில் ₹44.5 கோடி, தெலுங்கு மார்க்கெட் ₹15.5 கோடி, இந்தி ராக்கெட் ₹4.5 கோடி, மற்றும் கன்ன மார்க்கெட் ₹50 லட்சம் வசூலித்தன. Coolie படத்திற்கு தமிழ்நாட்டில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூட இதுவரை 400 கோடிக்கு மேல் வசூல் பெற்று பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
வெள்ளிக்கிழமை ₹54.75 கோடி வசூலித்த போதிலும், இரண்டாம் நாளில் வசூலில் சற்று குறைவு ஏற்பட்டது. முக்கியமாக வடஇந்தியாவில் இந்த படத்திற்காக தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக வார்2 படம் மோசமாக உள்ளதாக கூலி காட்சிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. சனிக்கிழமையன்று, திரைப்படம் ₹38.6 கோடவசூலித்ததன் மூலம், மூன்று நாள் மொத்த வசூல் ₹118.5 கோடியாக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications