ஜெய்ப்பூரில் கொடிகட்டிப் பறக்கும் தமிழர்! தள்ளு வண்டிக்காரர் இன்று கோடீசுவரன்!
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர். இங்கே தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்பு என்பவர் தள்ளுவண்டிக் கடையை நடத்தி வந்தவர், இன்று மிகப்பெரிய உணவகத்தைக் கட்டி கோடீஸ்வரராக மாறி இருக்கிறார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர். இங்கே தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்பு என்பவர் தள்ளுவண்டிக் கடையை நடத்தி வந்தவர், இன்று மிகப்பெரிய உணவகத்தைக் கட்டி கோடீஸ்வராக மாறி இருக்கிறார்.

இவ்வளவு பெரிய பணக்காரராக மாறிய பிறகும், அவர் அந்த தள்ளுவண்டிக் கடையை மூடவே இல்லை என்பதுதான் சிறப்பான சம்பவம்.
இந்த அன்புக்கு ஜெய்ப்பூரில் மட்டும் 5 தள்ளுவண்டிக் கடைகள் உள்ளன. அத்தனைக் கடைகளிலும் வாடிக்கையாளர்களின் கூட்டம் ஈக்கள் போல் மொய்க்கின்றன.
இவர் மதுரையின் அருகே உள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்தவர். அங்குதான் பூர்வீகம். கடந்த 2000 ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்குப் பிழைப்புத் தேடி சென்றுள்ளார். ஊரில் மிகப்பெரிய வியாபாரங்களைச் செய்து கொண்டிருந்த அன்புக்கு திடீரென்று அத்தனை தொழில்களும் தரைமட்டமாகப் படுத்துவிட்டன.

அதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அன்பு, 400 ரூபாய்க்கு பொது ரயில் பெட்டியில் ராஜஸ்தான் சென்றுள்ளார். இவரது உறவினர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் ஹோட்டல் தொழில் பார்த்து வருகிறார்கள்.
ஆகவே, அந்த நம்பிக்கையில் ராஜஸ்தான் புறப்பட்டு இருக்கிறார். அதுவும் ஒத்தை ஆளாக வந்தவர், உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இன்றைக்கு கோடீஸ்வரனாக உச்சத்திற்கு உயர்ந்திருக்கிறார்.
இவர் ராஜஸ்தான் வந்தபோது இந்தி தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. அவ்வளவு ஏன் தமிழே எழுதப் படிக்கத் தெரியாது. அப்படியான ஒரு நிலையில் அவரை வறுமை ஊரைவிட்டுச் செல்ல அழுத்தம் தந்துள்ளது.

அன்று அன்ரிசர்வ்டு ரயிலில் ராஜஸ்தான் வந்த அன்புக்கு இன்றைக்கு ஜெய்ப்பூரில் 5 மாடி கட்டியம் சொந்தமாக உள்ளது. இப்போதுதான் கட்டி முடித்துள்ளார். அதில் ஒரு மாடியில் பார்ட்டி ஹால் ஒன்றும் உள்ளது. 200 பேர் கலந்து கொள்ளும் அளவுக்கான ஹால் அது.
மனைவி ஹவுஸ் ஒய்ஃப். முதல் மகளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். இரண்டாவது மகள் தமிழ்நாட்டில் ஃபிசியோதெரபி படித்து வருகிறார். மூன்றாவது மகன் எம்.பி.பிஎஸ் டாக்டர் படிக்கிறார்.
இவர் ராஜஸ்தான் சென்ற காலத்தில் ஒரு தோசை 10 ரூபாய்க்கு விற்றுள்ளார். அந்தக் காலத்தில் தினம் 400 ரூபாய்க்கு விற்பனை நடக்குமாம். அதில் 200 ரூபாய் தினம் சேமிப்பேன் என்கிறார் அன்பு.

கூடுதலாக இன்றைக்கு அதே தோசை 90 ரூபாய்க்கு விற்பதாகச் சொல்கிறார். அந்தளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது என்பது புரிகிறது. இத்தனை தகவல்களையும் அவர் Archives of Hindustan என்ற யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார்.
இவர் பேசும் போது அவ்வளவு அப்பாவியாகப் பேசுகிறார். ஊர் வாசனை இன்னும் அவரை விட்டுப் போகவில்லை. தமிழ்நாட்டிலிருந்து வந்தால் தங்க இடம் கொடுத்து மாதம் 15 ஆயிரம் தருவேன்.

ஆனால், பலர் ராஜஸ்தான் குளிர், வெயில் எனக் காரணம் சொல்லிவிட்டுத் திரும்பப் போய்விடுகிறார்கள். நம்ம ஊர் ஆட்கள் உழைக்க விரும்புவதில்லை என்கிறார்.
இவர் கடையில் வேலை செய்யும் பெரும்பாலானவர்கள் ராஜஸ்தான்காரர்கள். இந்த ஜெய்ப்பூரில் கடைக் கட்டி வாடகைக்கும் விட்டுள்ளார். மற்றபடி தனது சொந்த ஊரில்தான் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளேன் என்றவர், பிழைப்பதற்காக எந்த ஊருக்குப் போகலாம்.

அப்படிப் போய் வென்று காட்டுவதற்கும் வாழ்க்கையில் உயர்ந்து வருவதற்கும் முதலீட்டை விட முதலில் தன்னம்பிக்கைதான் முக்கியம் என்கிறார் இந்தக் கோடீசுவரர்.

இங்குள்ள தமிழ்ச்சங்கம் 1960களிலேயே தொடங்கப்பட்டுள்ளது. அதில் அன்பும் தலைவராக இருந்துள்ளார். நடிகராக எம்.ஜி,ஆர். இருந்த போது படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றுள்ளார்.

அப்போது அந்தச் சங்கத்திற்கு வந்தபோது 30 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளார். அதைவைத்து கொஞ்சம் கொஞ்சமாக 25 லட்சம் வரை நிதி திரட்டியுள்ளனர். இன்றைக்கு 2 ஏக்கர் நிலம் தமிழ்ச்சங்கத்திற்கு உள்ளது என்கிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications