2வது தாக்கம் சென்னைக்கு பத்து நாளில் வர போகுது.. என்ன இது? அன்புமணி ராமதாஸ் இப்படி சொல்லுறாரே? ஷாக்
சென்னை: சென்னைக்கு இரண்டாவது தாக்கம் இன்னும் 10 நாட்களில் வரப்போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வங்கக்கடலில் கடந்த 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த திங்கள் கிழமை தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

சென்னை பாதிப்பு ஏன்?: இந்த புயல் சென்னையில் ஏன் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது என்று வானிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம்.
இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும். அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. இதனால்தான் சென்னை மிக கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.
இரண்டாவது தாக்கம்: அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது. இதனால் விடமால் மழை பிச்சு எடுத்தது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை புயல் சென்னையை நோக்கி கொண்டு வந்தது. இந்த நிலையில் சென்னைக்கு இரண்டாவது தாக்கம் இன்னும் 10 நாட்களில் வரப்போவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நாசம்: நேற்று செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ், சென்னையை நாசம் செய்துவிட்டார்கள். சென்னையில் கால்வாய்களை அமைப்பதற்கு ஜப்பான் நாட்டு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். சென்னை மேயருக்கு பதவி மட்டும் போதாது பவர் கொடுங்கள். சென்னை மேயருக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் வேண்டும்.
திராவிட கட்சிகள் ஆட்சியில் மோசமான நிலை ஏற்பட்டு உள்ளது. சென்னை முழுக்க 200+ ஏரிகள், நீர் நிலைகளை காணவில்லை. எல்லாத்தையும் பிளாட் போட்டு விற்று உள்ளனர். தவறுதலாக, விதிகளை மீறி இப்படி செய்துள்ளனர்.
இரண்டாவது தாக்கம்: இதை எல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அரசு தவறான பல திட்டங்களை லஞ்சம் வாங்கிக்கொண்டு அனுமதித்து உள்ளது. இது போன்ற திட்டங்கள்தான் சென்னைக்கு வெள்ளம் ஏற்பட முக்கிய காரணமாக மாறி உள்ளது. அதனால்தான் எல்லா வருடமும் வெள்ளம் ஏற்படுகிறது. இதை எல்லாம் சரி செய்யாமல் சென்னை வெள்ளத்தை தடுக்கவே முடியாது.
சென்னைக்கு இரண்டாவது தாக்கம் இன்னும் 10 நாட்களில் வரப்போகிறது. இந்த முறை வரப்போவது புயல் இல்லை. அது நோய் தாக்கம். புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாக போகிறார்கள். கவனமாக இருங்கள். அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை, நடவடிக்கைகளை இப்போதே செய்திடுங்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications