2024ல் நீங்கதான் பாஜக முகம்.. ரெடியாகும் தமிழக சீனியர்.. டெல்லிக்கு "ப்ரோமோஷன்".. அமைச்சர் பதவி?
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து எம்பி ஆகி அமைச்சராக்கலாம் என்ற திட்டத்தில் எம்எல்ஏ ஒருவர் இருக்கிறாராம்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கு பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது, அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட பாஜக முடிவு செய்து இருந்ததாக கூறப்பட்டது , ஆனால் 20 இடங்களில் வாய்ப்பு இல்லை. அவ்வளவு இடங்கள் கொடுக்க முடியாது என்று அதிமுக கூறியதால் இந்த கூட்டணி உடைந்ததாக கூறப்பட்டது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவிற்கு அண்ணாமலை உள்ளிட்ட பலர் மீது காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம்.. இந்த இடஒதுக்கீடு விவகாரம்தான் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது அதிமுக - பாஜக கூட்டணி முறிந்துள்ளது. அதிமுக 20 இடங்கள் கொடுக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.
( ஒரே கல்லில் 2 மாங்காய்.. CM breakfast scheme செய்த மாற்றம்..! கோவை ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்)
கூட்டணி முறிவு காரணம்: இதுவே கூட்டணி முறிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து எம்பி ஆகி அமைச்சராக்கலாம் என்ற திட்டத்தில் எம்எல்ஏ ஒருவர் இருக்கிறாராம். அதன்படி அதிமுக - பாஜக கூட்டணி முறிந்த நிலையில் பாஜக தனியாக கூட்டணி அமைக்கும் திட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக தலைமையில் தனி கூட்டணி அமைக்கப்படும் என்கிறார்கள். இதில் 9 லோக்சபா தொகுதிகளை பாஜக குறி வைத்து பணியாற்றுவதாக கூறப்படுகிறது. கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 தொகுதிகளை பாஜக குறி வைத்து பணியாற்றும் என்கிறார்கள். இந்த தொகுதிகளில் சில சீனியர்கள் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
தமிழ்நாடு பாஜகவில் கடந்த 10 ஆண்டுகளாக முக்கிய தலைவர்களாக இருந்த பலரும் தற்போது ஆக்டிவ் அரசியலில் இருந்து மாற்றப்பட்டு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு பாஜகவிலும் இளம் தலைவர்களுக்கு தற்போது முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.அண்ணாமலையின் நியமனத்திற்கு பின் கட்சியில் பல அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. பல இளைஞர்களுக்கு முக்கிய பொறுப்புகள், பல்வேறு அணி தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன.
ஒதுக்கப்பட்ட சீனியர்கள்: இன்னொரு பக்கம் பாஜகவில் சீனியர்களாக இருந்த பல்வேறு தலைவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். முக்கியமாக எல் . முருகனுக்கு முன்பாக தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தமிழிசை தூத்துக்குடியில் தோல்வி அடைந்த பின் 2019ல் தெலுங்கானா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இவர் ஆளுநர் ஆன பின் எல் முருகன் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவராக வலம் வந்த முன்னாள் தலைவர் இல கணேசன் 22ம் தேதி ஆகஸ்ட், 2021 அன்று மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். முன்னதாக மேற்கு வங்க ஆளுநராக இல கணேசன் கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அதன்பின் இவருக்கு வழங்கப்பட்ட மேற்கு வங்க ஆளுநர் கூடுதல் பொறுப்பு நீக்கப்பட்டது. மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் சீனியர்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் பாஜக சிரமப்பட்டு வருகிறது. இதையடுத்து சீனியர் ஒருவரை மதிக்கும் வகையில், அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாஜக சீனியர் எம்எல்ஏ ஒருவரை எம்பி தேர்தலில் நிற்க சொல்ல உள்ளதாம். கோவை எம்பி தேர்தலில் நிற்க வைத்து அவர் வெற்றிபெறும் பட்சத்தில், அவரை மத்திய அமைச்சராக்கிய.. தமிழ்நாட்டில் பாஜகவின் முகமாக்கும் திட்டமும் பாஜக மேலிடத்திற்கு உள்ளதாம்.












Click it and Unblock the Notifications