Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே கல்லில் 2 மாங்காய்.. CM breakfast scheme செய்த மாற்றம்..! கோவை ஆட்சியர் சொன்ன குட் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தால் கோவை மாவட்டத்தில் மட்டும் 60 ஆயிரம் குழந்தைகள் பலனடைந்துள்ளனர் என்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஐஏஎஸ்.

மேலும் இத்திட்டத்தால் பெற்றோர்களாகிய நாங்களும் பலனடைந்திருக்கிறோம் என்கிறார்கள் கோவை மாவட்டத்தில் உள்ள இரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

இந்த இரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில்தான் முகமது அசரத் என்ற சிறுவன் படித்து வருகிறான். இந்தப் பையனைத் தினம் காலையில் வீட்டில் பெற்றோர்கள் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளப்பிவிடுவது பெரிய இம்சையாக இருந்திருக்கிறது.

ஆனால், இப்போது எல்லாம் பள்ளிக்கு வந்து தன் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து, தினம் விதவிதமான காலை உணவைச் சாப்பிடுவதாகச் சொல்லி சந்தோசப்படுகிறான்.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

"எங்கள் பள்ளிக்கு வருகின்ற பல பிள்ளைகள் மிகவும் ஏழையான குடும்ப பின்புலத்தைக் கொண்டவர்கள். அவர்கள் பெரும்பாலும் பள்ளிக்கு வரும்போது சாப்பிட்டு வருவதில்லை. பசியுடன்தான் வருகிறார்கள்.

அவர்களிடம் வயிற்றுக்கு உணவில்லாதபோது சிறிது செவிக்கும் ஈயப்படும் என்று எப்படிச் சொல்லிக் கொடுத்துப் புரியவைப்பது? அவர்களே கடுமையான பசியில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

நாங்கள் என்ன செய்ய முடியும்? ஒரு குழந்தைக்கு உணவு தரலாம். அத்தனைப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களால் உணவு தர முடியுமா? அதுவும் தினம் தர முடியுமா?

அப்படியான வேதனையிலிருந்து அந்தக் குழந்தைகளைக் காப்பாற்றி இருக்கிறார் நம்ம முதல்வர் ஸ்டாலின் ஐயா. இப்போது எல்லாம் அந்தக் குழந்தைகளின் முகத்தில் ஏற்படும் சந்தோஷத்தைப் பார்க்கவேண்டுமே? இது ஒரு அற்புதமான திட்டம் என்கிறார் இந்தப் பள்ளியின் ஆசிரியை ஒருவர்.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

"இந்தக் காலை உணவுத்திட்டத்தின் சிறப்பு என்ன தெரியுங்களா? குழந்தைகளுக்குத் தினமும் ஒரே மாதிரியான காலை உணவு இல்லைங்க. அரசு வழங்கி உள்ள மெனுவை பாருங்கள். ஒரு தனியார் ஹோட்டல் மெனு அளவுக்கு அவ்வளவு வகைகள்.

இப்படி ஒரு உணவைத் தரமான சமைத்து வேறு எந்த மாநிலத்தில் உள்ள பள்ளிகளிலும் போட்டதா சரித்திரம் இல்லைங்க என்கிறார். கூடவே இதை யோசித்துச் செயல்படுத்திய முதல்வரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்'' என்கிறார் மற்றொரு ஆசிரியை.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

"பெற்றோர்களின் பெரிய கவலையே குழந்தைகள் தினமும் ஒழுங்கா சாப்பிடுவதில்லை என்பதுதான். அவர்கள் பள்ளிக்கு வரும் அவசரத்தில் பசியோடு வந்துவிடுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இந்தக் காலை உணவுத் திட்டம் வந்த பிறகு என் குழந்தை நிம்மதியாகப் பள்ளியில் சாப்பிடுகிறான். நாங்கள் வீட்டில் பதறாமல் நிம்மதியாக இருக்க முடிகிறது" என்கிறார் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவனின் தந்தை ஒருவர்.

காலை உணவுத் திட்டத்தில் இவரை அதிகம் ஈர்த்த விசயம், சிறுதானிய உணவு வகைகளைச் சேர்த்து அதன் மூலம் சத்தான உணவை அரசு பிள்ளைகளுக்கு வழங்கி இருக்கிறது என்கிறார்.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

"எங்கள் காலத்தில் சிறுதானிய உணவுகளை வீட்டிலேயே சாப்பிட்டோம். இன்றைய தலைமுறை பிள்ளைகளுக்கு அந்த உணவுகளைத் தேடிக் கொடுக்க முடிவதில்லை. ஏனெனில் வீட்டில் உள்ளவர்களுக்கு அதை எப்படிச் சமைப்பது என்றே தெரிவதில்லை.

அத்துடன் சாதாரண இட்லியை வாங்கிவிடலாம். சிறுதானிய உணவுகள் என்பது இன்றைக்கு காஸ்ட்லியான சமாச்சாரம். இதன் மூலம் மறைந்து போன உணவு வகைகளை அரசு மீட்டு உள்ளது. அப்படியே அதை இளம் தலைமுறைக்குப் பழக்கப்படுத்தியும் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினின் இந்தத் திட்டம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்என்கிறார் ஒரு பெண்மணி.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

"இந்த ரத்தினபுரி பள்ளியில் மட்டும் 250 குழந்தைகள் படித்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள 120 பள்ளிகளிலும் இந்தக் காலை உணவுத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

மொத்தமாக 12 ஆயிரம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். இத்திட்டம் செயல்முறைக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட சர்வேயில் மாணவர்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளதை அறியமுடிகிறது என்கிறார் பள்ளி அதிகாரி ஒருவர்

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

இதே பள்ளியில் படித்துவரும் ஒரு குழந்தையின் தாய் சுஜிதா, தனது மகள் சாப்பாடு மட்டுமல்ல; வழங்கப்படும் உணவு மற்றும் தட்டுகூட சுத்தமாகவும் புதியதாகவும் இருப்பதாகச் சொல்லி இருக்கிறாள் என்கிறார்.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

இன்னொரு தாய் சல்மா. இவரும் தனது மகள் சத்தான உணவைத் தினம் சாப்பிடுவதாகவும் தன்னால்கூட இத்தனை வகையான சாப்பாடுகளைச் செய்து தர முடியாது என்றும் சொல்கிறார்.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

நம்மிடம் பேசிய இந்த இரண்டு தாய்களும் எங்கள் கஷ்டத்தை உணர்ந்து இத்திட்டத்தைக் கொண்டுவந்த முதல்வர் தாய்மார்களின் மனதை உணர்ந்து இத்திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறார் என்கிறார்கள்.

"இந்தக் கோவையில் மட்டும் இந்தக் காலை உணவுத்திட்டத்தால் மொத்தமாக 60 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இத்திட்டம் செயல்படுத்திய பிறகு ஒரு சர்வே எடுத்தோம். அதில் குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரித்துள்ளதைக் கண்டறிந்தோம். மேலும் வருகைப்பதிவு அதிகரித்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளோம்.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கும் சமையல் பயிற்சி அளித்துள்ளோம். ஒவ்வொரு நொடியும் ஆப் மூலம் கண்காணித்து வருகிறோம். அதைத்து தரவுகளும் புகைப்படங்களாகப் பதிவேற்றப்படுவதால் தப்பு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஐஏஎஸ்

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு சமையல் அறையில் 7,500 ஆயிரம் குழந்தைகளுக்குத் தினம் சமையல் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. அதில் பணிபுரியும் ஊழியர் ஒருவர், "மொத்தம் 5 பெரிய பிரியாணி அண்டாவில் காலை உணவைத் தயார் செய்கிறோம்.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

இந்தச் சமையல் அறையே மிக நவீனமானது. தரக்கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள சமையல் அறை. முன்பு போலக் கொட்டகையில் வைத்துச் சமைக்கும் முறை எல்லாம் இல்லை.

ஒரு ஹை கிளாஸ் ஹோட்டல் சமையல் அறையில் என்ன என்ன வசதிகள் உள்ளனவோ அதை எல்லாம் நீங்கள் இங்குப் பார்க்கலாம் என்கிறார்

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

ஒரு நாள் பொங்கல், இன்னொரு நாள் பருப்பு சாதம், மற்றொருநாள் பச்சைப்பயறு அரிசி உப்புமா, சேமியா உப்புமா, சம்பா ரவை உப்புமா, இப்படிப் பல வகைச் சாப்பாடுகளுடன் சமீபத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் இனிப்பு கேசரியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலைக் கேட்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது நமக்கு.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

சொல்லப்போனால் இந்தக் காலை உணவுத்திட்டம் குழந்தைகளுக்கு மட்டும் பயன் அளிக்கவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள உதிரி தொழிலாளர்களான சமையற் கலைஞர்கள் பலருக்கும் நிரந்தர வேலை வாய்ப்பையும் மறைமுகமாக வழங்கி இருக்கிறது.

60,000 school children in Coimbatore district have benefited from the Chief Ministers breakfast scheme

இதன் மூலம் ஒரு பொருளாதார சுழற்சி சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் இந்த விசயத்திலும் முதல்வர் ஒரே கல்லில் 2 மாங்காய்களை அடித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+