"அம்மா இன்னும் வரலப்பா" குழந்தை சொன்னதுமே மனைவியை தேடிய கணவர்.. திருச்சியில் நள்ளிரவில் கண்ட காட்சி
திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தில், காண்போரை பதைபதைக்க வைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. 2 பிள்ளைகளுக்கு தாயான 32 வயது இளம்பெண் ஒருவர், மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.. அத்துடன் மிகக் கொடூரமாகவும் கொலை செய்யப்பட்டுள்ளார்.. இந்த பெண்ணின் சடலத்தை கண்டு, ஊர் மக்களே அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.. என்ன நடந்தது?
திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர்தான் இந்த இளம்பெண்.. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று இந்த பெண், தனது வீட்டில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மாட்டு கொட்டகைக்கு மாட்டுக்கு வைக்கோல் போட சென்றிருக்கிறார்.. அதற்கு பிறகு வீட்டுக்கு திரும்பவில்லை.

திருச்சி தம்பதி
இரவு வீட்டுக்கு வந்த கணவன், குழந்தைகளிடம் அம்மா எங்கே என கேட்டிருக்கிறார்.. மாட்டு கொட்டைக்கு போனவர் இன்னும் வரவில்லை என குழந்தைகள் சொல்லியிருக்கிறார்கள்.. இதனால் மாட்டு கொட்டகைக்கு மனைவியை தேடி சென்றார் கணவர்.. ஆனால் அங்கும் மனைவி இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடினார். நள்ளிரவு வரை தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போன கணவன், காணக்கிளியநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.
அம்மா இன்னும் வரலப்பா
புகாரைப் பெற்றுக் கொண்ட காணக்கிளியநல்லூர் போலீசார், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீஸ் மோப்பநாய் உதவியுடன், அருகில் இருந்த சிறுகளப்பூர் ஏரி பகுதியில் முதற்கட்டமாக தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர்.. பிறகு புள்ளம்பாடி மற்றும் லால்குடி தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பரிசல் மூலமாக ஏரியின் உட்பகுதியில் தண்ணீருக்குள் தீவிரமாக தேடினார்கள்.
நேற்று பிற்பகல் 12 மணியளவில், ஏரியின் நடுவே தண்ணீர் சூழ்ந்திருந்த ஒரு முட்புதர் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தேடியபோது, அங்கு அந்த இளம்தாயின் சடலம் கிடந்தது.. ஆடையின்றி, கை மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு சடலத்தை போலீசார் மீட்டு, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி ஏரி புதரில் கண்ட காட்சி
பிறகு திருச்சி மாவட்ட எஸ்பி டோங்ரோ பிரவீன் உமேஷ் மற்றும் லால்குடி டிஎஸ்பி ராஜமோகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அந்தப் பெண்ணை மர்ம நபர்கள் வழிமறித்து, பாலியல் வன்கொடுமை செய்து கொலையும் செய்துவிட்டு, உடலை ஏரிக்குள் வீசிச் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் பல கோணங்களில் இப்போது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்., முக்கியமாக, சிறுகளப்பூர் பகுதியில் உள்ள கிரஷர் நிறுவனங்கள் மற்றும் காற்றாலை நிறுவனங்களில் தங்கி வேலை பார்த்து வரும் வடமாநில தொழிலாளர்களிடம் போலீசார் தங்களது தீவிர விசாரணையை விரிவுபடுத்தி உள்ளார்களாம்.. விரைவில் குற்றவாளியை கைது செய்து விடுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications