பாக்யராஜ் கோவா போனதே தப்பு.. 2 நாள் கழித்து குஷ்பு அந்த போட்டோவை போட்டிருக்க கூடாதா?
சென்னை: "தனிப்பட்ட முறையில் பாக்யராஜ் மிகவும் மென்மையான மனிதர். ஆவேசமாகவோ தடிமனான வார்த்தைகளை பயன்படுத்தியோ பேசுபவர் கிடையாது. அதேநேரத்தில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது குறித்து பலரும் பேச தயங்கும்போது, நான் துணிச்சலாக அதனை விமர்சிக்கிறேன். பாக்யராஜூக்கு எதுக்கு அரசு மரியாதை என்று வெளிப்படையாகவே கேள்வி கேட்கிறேன்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா
பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "இயக்குநர் பாக்யராஜுக்கு குஷ்புவின் குடும்பத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லையென்றால், கல்யாண போட்டோ வெளியீட்டைப் பற்றி இங்கு யாரும் கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். ஆனால், குஷ்புவின் குடும்பத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்பிய ஒரு மனிதர், மறுநாளே இறந்திருக்கும்போது, குஷ்பு தரப்பு உடனே தங்களின் கொண்டாட்ட போட்டோக்களை இணையத்தில் வெளியிடுவது எந்தவகையிலும் முறையானது கிடையாது.

குஷ்பு பதிவிட்ட போட்டோ
இணையவாசிகள் யாரும் குஷ்பு ஏன் சாவுக்கு வரவில்லை என்றோ, ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்றோ கேள்வி எழுப்பவில்லை. ஒருபுறம் மரணத்தினால் துக்க சூழல் இருக்கும்போது, இந்த மகிழ்ச்சியான போட்டோக்களை 2 நாட்கள் தள்ளி வெளியிட்டால் என்ன? என்றுதான் கேட்கிறார்கள்.
இந்த செயலை விலங்கு மற்றும் பறவைகளின் குணத்தோடு நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு காகம் அடிபட்டு இறந்தால் கூட, பல காகங்கள் ஒன்றாகக் கூடி அங்கு துக்கம் அனுசரிக்கின்றன. காட்டில் ஒரு மிருகம் இறந்தால், மற்ற மிருகங்கள் அதன் அருகில் சோகமாகத் தங்களின் முகத்தை வைத்துக் கொண்டு நிற்பதை நாம் பார்க்கிறோம்.
பாக்யராஜ் ஏன் கோவா சென்றார்
அதுமட்டுமல்லாமல் ஒரு தெருவில் நமக்கு அறிமுகமே இல்லாத ஒருவரின் இறப்புக்காக பந்தல் அமைக்கப்பட்டிருந்தால், அந்தத் துக்கத்தைக் கலைக்கக் கூடாது என்பதற்காக நாம் பக்கத்துத் தெரு வழியாகச் செல்கிறோம் அல்லது நம்முடைய வாகனத்தை நிறுத்தித் தள்ளிச் செல்கிறோம். இதுதான் சாதாரண மனிதர்களுக்குள் இருக்க வேண்டிய அடிப்படை நாகரிகம் ஆகும்.
ஆனால் குஷ்பு போன்றவர்கள் "என் வாழ்க்கை, என் குடும்பம், என் மகிழ்ச்சி" என்று சுயநலமாக மட்டுமே ஓடுகிறார்கள். அடுத்தவர்களின் துக்கத்தில் அவர்கள் குறைந்தபட்ச நாகரிகத்தைக் கூடக் காட்டுவதில்லை. தங்களின் கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிடுவதில் அவர்கள் காட்டிய அவசரத்தை தவிர்த்திருக்கலாம்.
திருமண போட்டோ ஏன் ஷேர் செய்தார்
குஷ்புவின் திருமண நிகழ்வில் பங்கேற்றுத் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட ஒரு மனிதரின் மரணத்தைக் கொஞ்சம் கூட மதிக்காமல் இப்படி நடந்துகொள்வதைக் கேள்வி கேட்கும் இணையவாசிகளும் ஊடகங்களும் இன்றும் ஒரு நல்ல இதயத்தோடுதான் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சியாகும்.
குஷ்பு தன்னை ஒரு பெரிய அரசியல்வாதி என்றும் அறிவுஜீவி என்றும் கூறிக்கொள்கிறர்கள்.. இப்படி தடித்த வார்த்தைகளில் இதற்கு நியாயம் கற்பித்து பேசுவதை விட்டுவிட்டு, ஒரு ஆர்வத்திலோ அல்லது மகிழ்ச்சியிலோ போட்டோக்களை வெளியிட்டுவிட்டேன் என்று எளிமையாகக் கூறி இந்த விவாதத்தை முடித்திருக்கலாம். ஆனால், "நான் போட்டோக்களை வெளியிட்டதில் என்ன தவறு? அது என் சந்தோஷம்" என்று அவர் நியாயம் கற்பிப்பது எனக்குக் கவலை அளிக்கிறது.
70 வயதானவர் உடல்நிலை
இவர்களை எல்லாம் நம்பி பாக்யராஜ் இங்கிருந்து கோவா வரை சென்றதற்கு இது தேவையா என்று நான் கேட்கிறேன். இதைக்கேட்டால் நான் தேவையில்லாமல் கெட்டவன் ஆகிவிடுகிறேன். இந்த 70 வயது காலத்தில் கோவா வரை சென்று அந்த குத்தாட்டம் மற்றும் கும்மாளம் எல்லாம் தேவையா? இக்காலத்தில் எல்லோரும் என் சந்தோஷம், என் மகிழ்ச்சி என்ற சுயநல எண்ணத்துடனேயே இருக்கிறார்கள்.
இந்த திருமணத்துக்கு சென்று அங்கு டான்ஸ் ஆடியதே பாக்யராஜ் செய்த தவறு ஆகும். 70 வயதானவர் சென்னை உள்ளூர் பகுதியில் உள்ள மண்டபமாக இருந்தால் சென்றிருக்கலாம், கோவா வரை அவ்வளவு தூரம் டிராவல் செய்தது ஏன்?
தொலைதூரப் பயணம் ஏன்
குஷ்பு தரப்போ தங்களுக்குள் அப்படி ஒன்றும் பெரிய நெருக்கம் இல்லை என்பதைத் தங்களின் செயல்பாட்டின் மூலமாகவேவே காட்டிவிட்டார்கள். அவர்களுக்குள் நெருக்கமான உறவு இருந்திருந்தால், அவர்கள் துக்க நிகழ்வில் பங்கேற்றிருக்க வேண்டும் அல்லது ஒரு இரங்கல் கடிதமாவது அனுப்பியிருக்க வேண்டும்.
அதுவும் இல்லையென்றால் போட்டோக்களை வெளியிடாமலாவது தவிர்த்திருக்க வேண்டும். அதுவும் இல்லாமல் வயதானவர்கள் இதுபோன்ற தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். அப்படியே சென்றாலும் ஒரு பார்வையாளராக மட்டுமே அங்கு இருக்க வேண்டும்.
துணிச்சலான விமர்சனம்
தனிப்பட்ட முறையில் பாக்யராஜ் மிகவும் மென்மையான மனிதர். ஆவேசமாகவோ தடிமனான வார்த்தைகளை பயன்படுத்தியோ பேசுபவர் கிடையாது. அதேநேரத்தில் அவருக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டது குறித்துப் பலரும் பேசத் தயங்கும் நிலையில், நான் துணிச்சலாக அதனை விமர்சிக்கிறேன். இவருக்கு எதற்கு அரசு மரியாதை என்று நான் வெளிப்படையாகவே கேள்வி எழுப்புகிறேன்.
குஷ்பு தனது கொண்டாட்ட போட்டோக்களை வெளியிடுவதைக் குறைந்தது ஒரு வாரம் தள்ளிப்போட்டிருக்கலாம். ஒருபுறம் மரணச் செய்தியும் மறுபுறம் கொண்டாட்டப் போட்டோக்கள் ஒரே நேரத்தில் வருவது சரியல்ல
இதனிடையே, கோவா சென்ற இடத்தில் 2 நாட்கள் மாத்திரை சாப்பிடவில்லை என்றும் பல தகவல்கள் செய்திகளாக வருகின்றன. அவர் அங்கு என்ன செய்தார் என்பது நமக்குத் தெரியாது என்றாலும், இதுபோன்ற செய்திகள் பரவி கொண்டிக்கும்போது குஷ்பு தரப்பு போட்டோக்களை வெளியிடுவது முறையல்ல" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications