ஜூலை முதல் பாதி ராசி பலன்: தனுசு, மகரம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... யாருக்கு யோக நேரம்?

Subscribe to Oneindia Tamil

ஜூலை மாத பலன்கள்: ஜூன் மாதம் நிறைவடைந்து நாளை முதல் ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. அந்த வகையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் தனுசு மற்றும் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் காணப்பட்டாலும் கொஞ்சம் அமைதி காத்து அதனை சரிசெய்து கொள்வது நல்லது. யோக பலத்தை அதிகளவில் பெறும் காலகட்டம். விஷ்ணு வழிபாடு ஏற்றத்தைத் தரும். விஷ்ணு சஹஸ்ஹர நாமம், விஷ்ணு காயத்ரி, நரசிம்மர் கவசம் படிப்பது மேன்மையைத் தரும். ரத்த அழுத்தம், சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

rasi-palan-the-miracle-awaiting-dhanusu-magaram-rasi-people-in-the-next-15-days-full-predictions

வேலை ஆட்கள் மூலமாக இருந்த பிரச்சனைகள் தீரும். ஏற்றமும், நம்பிக்கையும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும் நல்ல காலகட்டம். உறவுகள் தொடர்பான விஷயங்களில் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏற்றமும், நம்பிக்கையும் ஏற்படும். பிள்ளைகள் விஷயத்தில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளுடைய படிப்பு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் பதட்டத்தை தவிருங்கள்.

பிள்ளைகளுக்கு நீண்ட நாட்களாக செய்ய வேண்டிய விஷயங்களை அடுத்தடுத்து செய்து முடிப்பீர்கள். பெரிய முதலீடுகள், பெரிய சேமிப்புகள், அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை, குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம் காணப்படும். ஆடை ஆபரணங்களை சேர்க்கும் யோகம் உண்டு. உறவுகளுக்குள் தேவையில்லாத பதட்டத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மகரம் ராசி பலன்

மகர ராசியினருக்கு தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும். எதிர்பார்க்காத இடத்தில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். விநாயகர், சிவன் வழிபாடு நன்மையைத் தரும். காரியசித்தி மாலை ஜெபிப்பது நன்மையைத் தரும். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கழுத்துப் பகுதியில் தேய்மானம், மயக்கம் வருவதற்கான வாய்ப்புள்ளது.

அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு திடீர் ஏற்றம் ஏற்படும். பதவி உயர்வு, சம்பள உயர்வில் இருந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். புதிய தொழிலை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்கான யோகம் உண்டாகும். திருமணத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். கணவன், மனைவி உடல்நிலையில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் அந்நியர் தலையீடு கூடாது. அபிராமி அந்தாதியில் இருக்கக்கூடிய 90 ஆவது பாடலை படிப்பது குடும்பத்தில் உள்ள சங்கடங்களை நிவர்த்தி செய்யும். இழுபறியாக இருந்த சிக்கல்கள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். பெரிய வெற்றிகளும், அனுகூலமும் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது அதீத கவனம் தேவை. கேது 8 ஆம் இடத்தில் இருப்பது நன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+