டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு.. சென்னை - பெங்களூர் உள்பட 5 இடங்களில் பணி
சென்னை: முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் -ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே மற்றும் கொல்கத்தாவில் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்து இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் நிறுவனத்தில் இருந்து தற்போது Gen AI Developer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சில முக்கிய தகுதிகள் வேண்டும். அதுபற்றிய விவரம் இங்கு வருமாறு:

இந்த பணிக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் அதிகபட்சமாக 12 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதேபோல் ஸ்கேலபிள் மற்றும் செக்யூர் ஏஐ ஏஜென்ட் மற்றும் அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்டவற்றில் 4+ ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஸ்டேன்டட் ஆர்ஏஜே மற்றும் வேரியண்ட்களான Grap, Agentic Contet Augmented and corrective உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஹைபப்ர்ஸ்கேலர்ஸ்களான Google/Azure/AWS உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒன்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும். பைத்தானில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இதுதவிர இன்னும் பிற விவரங்கள் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். பணி அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
இந்த பணிக்கான இண்டர்வியூ சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. இதில் சென்னை என்றால் TCS Magnum Block, Chennai One IT SEZ Phase - 2, 200 feet radial road, MCN Nagar Extension, Thoraipakka, Chennai 600 097 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெறும்.
பெங்களூர் என்றால் No.45, Industrial Suburb, Tumkur Rad, APMC Yard, Bengaluru 560 022 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். ஹைதராபாத் என்றால் TCS Deccan Park, Plot No.,1, Hitech City Main Road, 3N3, Software Units Layout, HUDA Techno Enlave, Madhpurm, Hyderabad - 500 081 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெறும்.
புனே என்றால் TCSSahyadri Park 1 Plot No.2 &3, Phase 3, Hinjewadi Rajiv Gandhi Infotech Park, Pune, Maharashtra 411 057 என்ற இடத்தில் இண்டர்வியூ நடைபெற உள்ளது. கொல்கத்தா என்றால் TCS Delta Park - Lords Building, Tata Consultancy Services (TCS) Plot C, Blok EP and GP, Salt lake Electronics Complex, Sector V (Bidhannagar), Kolkata, West Bengal - 700 091 என்ற முகவரியில் இண்டர்வியூ நடைபெறும்.
தற்போதைய அறிவிப்பில் பணி நியமனம் செய்யப்படும் இடம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. அநேகமாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே மற்றும் கொல்கத்தாவிலேயே பணி நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications