"த்ரிஷா மகள் இஸ்ஸி நாய் யாருடைய குழந்தை தெரியுமா?.. ரகசியத்தை உடைத்த விஷ்ணு விஷால்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் மீது இருக்கும் பாசம் பற்றி ரசிகர்களுக்கு தனியாக சொல்ல வேண்டியதில்லை. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் கூட தனது செல்லப்பிராணிகளுடன்தான் அதிக நேரம் செலவிடுவார். குறிப்பாக, தனது செல்ல நாய் இஸ்ஸி கிருஷ்ணனை அவர் "என் மகள்" என்றே அழைத்து வருகிறார். சமூக வலைதளங்களில் த்ரிஷாவின் புகைப்படங்களை விட, இஸ்ஸியுடன் இருக்கும் புகைப்படங்களே அதிகம் வைரலாகும்.

ஆனால், இந்த இஸ்ஸி எப்படி த்ரிஷா வீட்டுக்கு வந்தது? அதன் பின்னால் இருக்கும் கதை என்ன? என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்தது. அந்த ரகசியத்தை தற்போது நடிகர் விஷ்ணு விஷால் உடைத்திருக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி

தன்னுடைய 'கட்டா குஸ்தி 2' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால், "எனக்கு நாய்கள் வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். நான் ஆசையாக வளர்க்கும் 'டெடி' என்ற நாயின் குட்டிதான் இஸ்ஸி. அதுதான் இப்போது த்ரிஷா வீட்டில் இருக்கும் இஸ்ஸி கிருஷ்ணன். த்ரிஷாவும், என்னுடைய மனைவியும் நெருங்கிய தோழிகள். அதனால்தான் இஸ்ஸி த்ரிஷா வீட்டுக்கு போனது. இதை இதுவரைக்கும் நான் எங்கயும் சொல்லல" என்று கூறியிருக்கிறார். இந்த தகவல் வெளியாகியதும் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Trisha Vishnu Vishal Izzy Krishna Teddy

த்ரிஷாவின் நாய்

ஏற்கனவே த்ரிஷா மிகவும் ஆசையாக வளர்த்த ஜோரோ என்ற செல்ல நாய் உயிரிழந்தபோது, அவர் பல நாட்கள் மனமுடைந்து இருந்தார். அந்த நேரத்தில் த்ரிஷாவின் வாழ்க்கைக்குள் வந்ததுதான் இஸ்ஸி. அதன்பிறகு, இஸ்ஸியை குழந்தையைப் போல வளர்த்து வருகிறார்.

படப்பிடிப்புக்கு போனாலும், வெளிநாட்டு சுற்றுலா சென்றாலும், பிறந்தநாள் கொண்டாடினாலும், வீட்டில் ஓய்வாக இருந்தாலும் இஸ்ஸி இல்லாமல் த்ரிஷாவை பார்க்கவே முடியாது. பலமுறை, "இவள் என் மகள்" என்று அன்புடன் சொல்லி இஸ்ஸியுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்திருக்கிறார்.

Trisha Vishnu Vishal Izzy Krishna Teddy

இன்ஸ்டா பிரபலம் இஸ்ஸி

இஸ்ஸிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமூக வலைதளங்களில் த்ரிஷா இஸ்ஸியுடன் போடும் ஒவ்வொரு பதிவும் லட்சக்கணக்கான லைக்குகளை குவிக்கும். "பிறந்தா த்ரிஷா வீட்டு நாயாகப் பிறக்கணும்" என்று ரசிகர்கள் ஜாலியாக கமெண்ட் போடும் அளவுக்கு இஸ்ஸி பிரபலமாகிவிட்டது.

Trisha Vishnu Vishal Izzy Krishna Teddy

ரசிகர்கள் கருத்து

இந்நிலையில், இஸ்ஸி நிஜத்தில் விஷ்ணு விஷால் வளர்க்கும் டெடி நாயின் மகள் என்பது தெரிய வந்ததும், "அடடே... இத்தனை நாள் இந்த உறவு தெரியாம போச்சே!", "இஸ்ஸிக்கு இரண்டு வீடு இருக்குதே!", "த்ரிஷா சோகத்தில் இருந்த நேரத்தில் இப்படி ஒரு குட்டியை கொடுத்த விஷ்ணு விஷாலுக்கு நன்றி சொல்லணும்" என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Trisha Vishnu Vishal Izzy Krishna Teddy

இதற்கிடையில், விஷ்ணு விஷால் தற்போது 'கட்டா குஸ்தி 2' படத்தின் வெளியீட்டுக்காக தயாராகி வருகிறார். அதே நேரத்தில், த்ரிஷாவும் தொடர்ந்து பல பெரிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இருந்தாலும், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனது செல்ல மகள் இஸ்ஸியுடன் செலவிடும் நேரத்தை மட்டும் அவர் ஒருபோதும் குறைப்பதில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+