"நடிகர்" கட்சியுடன்.. சட்டென டீலிங் பேசிய மகன்.. கடுப்பான மாஜி தலை.. ஆனா யாரு சி.எம்? பூகம்பம்!
சென்னை: பெரிய அரசியல் கட்சியின் டாப் தலைவர் ஒருவருடன்.. நடிகர் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். பெரிய பதவி ஒன்றில் இருந்த.. அந்த மாஜியின் மகன்தான் இந்த டீலிங்கில் பேசி வருகிறாராம். ஆனால் இந்த டீலிங் தற்போது பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து அரசியல் ரீதியான பல திருப்பங்கள் நடந்து வருகின்றன. முக்கியமாக தமிழ்நாட்டில் புதிய கட்சிகளும், புதிய கூட்டணிகளும் விரைவில் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக கூட்டணி ரீதியாக பல மாற்றங்கள் வரும் நாட்களில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில்.. தமிழ்நாட்டில் ஒரு பெரிய கட்சி புதிய சின்ன கட்சி ஒன்றுடன் கூட்டணி வைக்கும் திட்டத்தில் இருக்கிறதாம். அந்த பெரிய கட்சியில் தற்போது முடிவுகளை எடுப்பது எல்லாம் மகன்தான். நேரடியாக அந்த மகன் பெரிய பதவி எதிலும் இல்லை. வெளியே பார்த்தால் ஆக்டிவ் அரசியலிலும் இல்லை.
ஆனால் உள்ளுக்குள் கட்சி ரீதியான முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்து வருகிறாராம். கட்சியில் பல திட்டங்களை வகுப்பது, தேர்தல் வியூகங்களை வகுப்பது என்று முக்கியமான முடிவுகளை எடுக்கிறாராம்.
ஒத்துப்போகவில்லை: இதனால் அவ்வப்போது அப்பா - மகனுக்கு ஒத்துப்போகவில்லை என்று கூறப்படுகிறது. மகன் எடுக்கும் சில முடிவுகள் அப்பாவிற்கு ஒத்துப்போகவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில்தான் அந்த மகன் தற்போது புதிய முடிவு ஒன்றை எடுத்து உள்ளாராம்.
அதன்படி தமிழ்நாட்டில் இருக்கும் புதிய நடிகர் கட்சி ஒன்றுடன் கூட்டணி வைக்க ஆலோசனை செய்து வருகிறாராம். ஆனால் இதை அப்பா அரசியல்வாதியான அந்த மாஜி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அதன்படி அந்த நடிகர் சார்பாக.. ஒரு முக்கிய புள்ளி இந்த மகனுடன் பேசி உள்ளாராம். அதில் கூட்டணி பற்றி நடிகரிடம் பேசுகிறேன்.
ஏற்கனவே உங்களுக்கும் - நடிகருக்கும் தகராறு உள்ளது. அவர் கூட்டணிக்கு எல்லாம் வர மாட்டார். எளிதாக கூட்டணி வைக்க மாட்டார். ஆனாலும் கூட்டணி பற்றி பேசுகிறேன் என்று கூறி உள்ளாராம். இதற்கு அந்த மகன் அரசியல்வாதி பேசுங்கள்.. ஆனால் என் அப்பாதான் முதல்வர் வேட்பாளர் என்று அடித்து சொல்லிவிட்டாராம்.
இதை அந்த நடிகர் தரப்பு ஆட்கள் ஏற்றுக்கொள்ளவில்லையாம். எங்க ஆளு.. தேர்தலில் நிற்பதே முதல்வர் பதவிக்குத்தான். அப்படி இருக்க முதல்வர் பதவியை எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது. முதல்வர் வேட்பாளர் எங்கள் ஆள்தான் என்று சொல்லிவிட்டாராம்.
மாஜி கடுப்பு: இந்த தகவலை அந்த மகன் அரசியல்வாதி.. அப்பாவிடம் போய் சொல்லி இருக்கிறாராம். இதை கேட்டுவிட்டு அப்பா அரசியல்வாதி மகனை கட்டுப்படுத்தி உள்ளாராம். உங்ககிட்ட யார் போய் அவரிடம் கூட்டணி பேச சொன்னது. நாங்கள் சொன்னமோ. கூட்டணி பற்றி எல்லாம் நாங்கள் முடிவு எடுத்துக்கொள்கிறோம். சிறிய ஆட்களிடம் எல்லாம் நாங்கள் போய் பேச முடியாது .. கூடாது என்று கண்டித்து அனுப்பி விட்டாராம்.
இதனால் அந்த கூட்டணி கண்டிப்பாக நடக்காது.. இரண்டு தரப்பும் இனி பேச்சுவார்த்தையும் நடத்தாது .. கூட்டணிக்கும் வாய்ப்பு இல்லை என்று அந்த பெரிய கட்சியின் ஆட்கள் சொல்லி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications