பாஜக வலையில்.. சிக்கிய அதிமுக "சுறா" மீன்கள்.. தொடர்பில்தான் இருக்காங்களாமே.. எடப்பாடிக்கு நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் சிலர் பாஜகவுடன் நெருக்கமாக உள்ளனர். டெல்லி பாஜக நிர்வாகிகளிடம் சில அதிமுகவினர் பேசி வருகின்றனர். சென்னை வழியாக செல்வதற்கு பதில் பெங்களூர், கொச்சி வழியாக டெல்லி சென்று பேசியவர்கள் இவர்கள். இவர்கள் பாஜகவுடன் இப்போதும் நெருக்கமாக உள்ளனர் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக சார்பாக சமீபத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. லோக்சபா கூட்டணி பேச்சுவார்த்தைக்காக அதிமுக நடத்திய இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது வேறு கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை. கூட்டணியில் இடம் கேட்க பெரிய கட்சி தொடங்கி சிறிய கட்சி வரை எதுவும் வரவில்லை. அது அதிமுகவிற்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

A set of top leaders of AIADMK are closely in relationship with top brass of BJP says Priyan

எங்கே அதிமுக தனியாக நிற்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முக்கியமாக தேமுதிக, பாமக இரண்டும் அதிமுக கூட்டணி உடன் ஆலோசனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் இதுவரை அதிமுகவிடம் நேரடியாக ஆலோசனை செய்யவே இல்லை.

கூட்டணி: இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைய உள்ள லோக்சபா கூட்டணி தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் பேட்டி ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், லோக்சபா தேர்தலை வைத்து ஓபிஎஸ், டிடிவி தினகரனை ஒன்றும் இல்லாமல் செய்ய வேண்டும். அவர்கள் அதிமுகவுடன் கூட்டணியில் இல்லை என்றால் காணாமல் போய்விடுவார்கள் என்று எடப்பாடி நினைக்கிறார். ஆனால் பாஜக இவர்களுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் உள்ளன. பாஜக இன்னும் கூட்டணி பற்றி பெரிதாக நினைக்கவில்லை. தமிழ்நாடு பக்கம் பாஜக இன்னும் 10 நாட்களில் திரும்பும். அப்போது எல்லாம் மாறும்.

பாஜகவை அதிமுகவை சேர்ந்த சிலர் விமர்சனம் செய்வது இல்லை. மணியான சிலர் பாஜகவை சிலர் விமர்சனம் செய்வது இல்லை. இந்த குழுவை சேர்ந்த சிலர், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் உடன் நெருக்கமாக உள்ளனர். அதனால் இவர்கள் பாஜகவுடன் மோத வாய்ப்பே இல்லை. பாஜகவை மொத்தமாக இவர்கள் கழற்றிவிட வாய்ப்பு இல்லை.

ஒருவேளை பாஜக வேண்டாம் என்று எடப்பாடி மொத்தமாக கழற்றிவிட்டால் அதன்பின் பெரிய சிக்கல் ஆகும். மணியான குழுவினர் எடப்பாடிக்கு எதிராக கூட திரும்பலாம். இன்னொரு பக்கம் எடப்பாடி உண்மையில் பாஜகவை எதிர்க்கிறாரா என்பதே கேள்விதான். இப்போதும் கூட அவர் கூட்டணி இல்லை என்றே சொல்கிறார். ஆனால் பாஜகவை எதிர்க்கவில்லை. சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்க பாஜக - அதிமுக பிரிந்துவிட்டதாக நாடகம் நடப்பதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

அப்படி இருக்க சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக பிரிக்கும் என்றும் சொல்ல முடியாது. பாஜகவை அதிமுகவை சேர்ந்த சிலர் விமர்சனம் செய்வது இல்லை. மணியான சிலர் பாஜகவை சிலர் விமர்சனம் செய்வது இல்லை. இதனால் அதிமுக இந்த கூட்டணியை முறித்து என்ன செய்ய போகிறது என்று பார்க்கலாம். மணியான குழுவை சேர்ந்த சிலர், பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் உடன் நெருக்கமாக உள்ளனர்.

அவர்கள் பாஜகவுடன் நெருக்கமாக உள்ளனர். சென்னை வழியாக செல்வதற்கு பதில் பெங்களூர், கொச்சி வழியாக டெல்லி சென்று பேசியவர்கள் இவர்கள். இவர்கள் பாஜகவுடன் இப்போதும் நெருக்கமாக உள்ளனர். பேசிக்கொண்டுதான் உள்ளனர். ஏன் தனியாக நிற்கணும். பாஜகவுடன் கூட்டணி வைத்தே நிற்கலாமே என்றுதான் இவர்கள் நினைக்கிறார்கள்.

ஒருவேளை இவர்கள் பேச்சை கேட்டு எடப்பாடி வரவில்லை என்றால் கட்சிக்கு உள்ளே மோதல்கள், பிரிவுகள் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும், என்று ப்ரியன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+