சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது ஒன்னு போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல.. வைரலாகும் வீடியோ!

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. இந்த ஒரு வீடியோ போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல

    சென்னை: ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.. இந்த ஒரு வீடியோ போதும்.. மக்களின் அவஸ்தையை சொல்ல! தமிழ்நாடுன்னு மட்டும் தெரியுது.. ஆனா எந்த ஊர்னு தெரியல.

    ரொம்ப பெரிய ரோடும் இல்லாம, ரொம்ப சின்ன ரோடும் இல்லாம, பொதுவா இருக்கிற ரோடு இது! பஸ், கார், லாரியெல்லாம் போற மாதிரிதான் பரபரப்பாக இருக்கு.

    அப்படி யாரோ ஒருத்தர் இந்த ரோடில் போகும்போதுதான் வீடியோ எடுத்திருக்கார். குழாயில் பெண்கள் தண்ணீர் பிடித்து கொண்டிருக்கிறார்கள். 10 குடம் இல்லை 20 குடம் இல்லை.. நூற்றுக்கணக்கில் குடங்கள் வரிசையாக அணி வகுத்துக் காத்துக் கிடக்கின்றன.

    கமல் இப்படி பேசியிருக்கிறாரே... கருத்துக் கூற விரும்பவில்லை.. குட்நைட்... பதிலளிக்க மறுத்த ரஜினி! கமல் இப்படி பேசியிருக்கிறாரே... கருத்துக் கூற விரும்பவில்லை.. குட்நைட்... பதிலளிக்க மறுத்த ரஜினி!

    பஞ்சம் பல்லிளிக்கிறது

    பஞ்சம் பல்லிளிக்கிறது

    வரிசையாக பிளாஸ்டிக்குடங்கள் தண்ணீர் பிடிப்பதற்காக வைத்துள்ளனர். அந்த ஊரில் உள்ள கடைகளில் இருக்கும் பிளாஸ்டிக் குடங்கள் எல்லாம் இங்கதான் இருக்கிறது. பச்சை, ரெட், மஞ்சள் என எல்லா கலர்களிலும் தண்ணீர் பஞ்சம் பல்லிளிக்கிறது.

    தண்ணீர் பஞ்சம்

    தண்ணீர் பஞ்சம்

    புயல் வராது, ஆனா மழை வரும்னு எச்சரித்தார்கள். அதிக அளவு மழை இருக்காது, அதை சேமிச்சு வைங்க, தண்ணீர் பஞ்சம் வருனு சொன்னாங்க. மாவட்ட நிர்வாகங்கள் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்ததோ தெரியவில்லை, சொல்ல முடியாத அளவுக்கு மக்கள் தண்ணீருக்காக தவித்து வருகிறார்கள்.

    கண்றாவி அவலம்

    இந்த காலி குடங்கள் மட்டும் இத்தனை கிலோ மீட்டருக்கு வைத்திருக்கிறார்கள், இவர்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்க வழி இருக்கிறதா? அவர்களின் குடிநீர் தேவைதான் நிறைவேறுமா? இன்னும் எத்தனை காலத்துக்குதான் இந்த கண்றாவி அவலம் என்று தெரியவில்லை!

    90 சதவீதம்

    90 சதவீதம்

    இது இந்த ஊரில் மட்டுமல்ல.. கிட்டத்தட்ட தமிழகம் முழுதும் இதே நிலைதான். சென்னையில் 90 சதவீத பகுதிகளில் குடிநீர் இல்லை. மக்கள் அல்லோகல்லப்படுகிறார்கள். எல்லா ஊர்களிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

    துரித கதி

    துரித கதி

    அரசுகள் என்ன நடவடிக்கை எடுக்கின்றன என்று தெரியவில்லை. அரசியல்வாதிகளோ, தேர்தல் முடிந்த பிறகு நமக்கு என்ன லாபம் கிடைக்கும், எங்கு போய் ஒட்டிக் கொண்டு எந்த லாபத்தை அடையலாம் என்று கணக்குப் போட்டு துரித கதியில் சொந்த சுய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஓடிக் கொண்டுள்ளன.

    மக்கள் கவலையை தீர்க்க வானமே அழுதால்தான் உண்டு.

    English summary
    The drinking water famine is in Tamil Nadu. The public has requested that the government take action to get rid of drinking water
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X