திமுக டிஎன்ஏ.. பூச்சாண்டி வேலை என் கிட்ட காட்டாதீங்க.. நான் பயந்து ஓடிட மாட்டேன்.. குஷ்பு அதிரடி
சென்னை: நான் பேசிய ஒரு கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் கொண்டு போய் திசை திருப்பும் வகையில் போடுவது திமுகவினரின் வேலை என்று குஷ்பு கூறியுள்ளார். பூச்சாண்டி வேலை எல்லாம் என் கிட்ட காட்டாதீங்க. நான் தவறு செய்தால் சிறு குழந்தையாக இருந்தாலும் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். நான் பயந்து ஓடிட மாட்டேன் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
பெண்களுக்கு உரிமைத் தொகை என்ற பெயரில் திமுக மாதம் ரூபாய் ஆயிரம் பிச்சை போடுவதால் உங்களுக்கு அவர்கள் ஓட்டு போட்டுவிடுவார்களா என்று கேட்டார் குஷ்பு. 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று குஷ்பு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. குஷ்புவிற்கு எதிராக பலரும் போராட்டத்தில் குதித்தனர். குஷ்புவின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து எரித்தனர்.

இந்த நிலையில் குஷ்பு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். உண்மை எப்படி பயத்தை கிளப்பி விடும் என்று பார்த்து கிட்டு இருக்கேன். திமுகவில் இருக்கிற அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை குஷ்பு பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் பேசிய பழைய வீடியோவை கூட எடுத்து போஸ்ட் செய்கிறார்கள் எதையுமே நான் டெலிட் செய்யவில்லை எல்லாமே என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இருக்கிறது.
நான் பேசும் போதோ ஒரு ஐடி விங், வார் ரூம் வைத்துக்கொண்டு பேசுவது கிடையாது. நேருக்கு நேராக தைரியமாக பேசுவேன். அதைத்தான் இப்போது செய்கிறேன். எத்தனையோ பேர் எனக்கு எச்சரிக்கை விடும் வகையில் பேசியிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக்கழகத்தில் நான் மிகவும் மதிப்பு மரியாதை வைத்துள்ளேன். அவர்களே என்னைப்பற்றி பேசுகிறார்.
நான் ஒரு விசயம் கேட்கிறேன். குஷ்பு பேசினால் பயமா? குஷ்பு உண்மையை பேசுவாள்.. தைரியமாக பேசுவாள். நான் பேசிய ஒரு கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மக்கள் மத்தியில் கொண்டு போய் திசை திருப்பும் வகையில் போடுவது திமுகவினரின் வேலை.
நீங்கள் எந்த அளவிற்கு மக்களை ஏமாற்றுகிறீர்கள்.. ஏமாற்றிக்கொண்டு வருகிறீர்கள். அது உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் மக்களுக்கும் தெரியும். நான் உங்க கிட்ட ஒரு விசயம் கேட்கிறேன் டாஸ்மாக் குறைப்பீர்களா? மாட்டீர்களா? இதுநீங்க சொன்னது. முதல்வர் ஸ்டாலின், இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது டாஸ்மாக் குறைப்பீங்களா?

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பிடிபட்டிருக்கிறது. அதுவும் உங்க கட்சிக்காரரிடம் இருந்துதான். அதுக்கும் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. டாஸ்மாக் மினிஸ்டர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அதுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பழைய வீடியோக்களை எடுத்து மீண்டும் போஸ்ட் செய்வது உங்களோட டிஎன்ஏன்னு நான் சொல்லியிருக்கேன்.
இப்ப உள்ள பிரச்சினை பேசுவதற்கு உங்க கிட்ட எதுவும் இல்லை. மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று நீங்கள் சொல்லுங்களேன். அது பற்றி உங்களால் சொல்ல முடியாது. ஏன்னா திமுக பற்றி எனக்கு நன்றாக தெரியும். அந்த தைரியம் உங்க தலைவனுக்கும் இல்லை உங்க யாருக்கும் இல்லை.
குஷ்பு எப்பவும் நேரடியாகத்தான் பேசுவாள். தலையை சுற்றி மூக்கை தொடமாட்டாள். சுற்றி வளைத்து பேசும் விசயம் குஷ்புவிற்கு பிடிக்காது. நீங்க தாய்மார்களுக்கு 1000 ரூபாய் கொடுப்பதற்கு பதிலாக டாஸ்மாக் குறைத்தால் பெண்கள் பல ஆயிரம் ரூபாய் சேமிப்பார்கள். சந்தோஷமாக தலை நிமிர்ந்து நடப்பார்கள் என்றுதான் நான் சொன்னேன்.
ஆனால் நான் பெண்களை கேவலப்படுத்தும் விதமாக பேசியதாக கூறி திசை திருப்பி விட்டார்கள். பெண்களை கேவலப்படுத்துவது, அவதூறாக பேசுவது... பெண்களைப் பற்றி தவறான செய்திகளை பரப்புவது திமுகவின் டிஎன்ஏ.. திமுகவில் இருக்கும் போது பார்த்திருக்கிறேன். வெளியே வந்தும் பார்த்திருக்கிறேன் இப்போதும் நான் பார்க்கிறேன்.
பூச்சாண்டி வேலை எல்லாம் என் கிட்ட காட்டாதீங்க. நான் தவறு செய்தால் சிறு குழந்தையாக இருந்தாலும் மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். நான் பயந்து ஓடிட மாட்டேன்.. மறுபடியும் சொல்றேன் அரசியல் நாகரீகம், மேடை நாகரீகம்.. தைரியமாக பேசக்கூடிய விசயங்கள் இந்த 3 விசயங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தது என்னுடைய ஆசான் டாக்டர் கலைஞர். அதை நீங்க எல்லாரும் மறந்துட்டீங்க. நான் மறக்கலை மறக்கவும் மாட்டேன். சொல்லிக்குடுத்த விசயங்களை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன். அவரை அவமானப்படுத்தும் வகையில் நான் பேச மாட்டேன்.
உங்க புது தலைவனுக்கு கீழே இருப்பவர்கள் மறந்திருக்கலாம். இப்படித்தான் பேச வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. உங்க மேல கோபம் இல்லை பரிதாபம்தான் உள்ளது. நீங்க இவ்ளோ விசயங்கள் செய்வதற்கு பதிலாக மத்திய அரசிடம் இருந்து இவ்ளோ பணம் வந்தது. பிரதமர் மோடி இவ்ளோ விசயங்கள் செய்து மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம் என்று சொல்ல உங்களுக்கு தைரியம் இல்லை.
திமுகவும் தைரியமும் கேட்டால் கல் தூக்கி வீசுவீங்க.. புடவை பிடிச்சு இழுப்பீங்க.. பெண்களை அவமரியாதை செய்வீர்கள்.. கீழ்தரமாக செய்வீர்கள். பெண்களை ஒரு அந்தஸ்துக்கு கொண்டு போய் அழகு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு கிடையாது. நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வேன். பெண்களுக்காக நான் போராடிக்கொண்டிருக்கிறேன். அது என்னோட ஃபாலோயர்ஸ்க்கு தெரியும் குட் லக்.. ஆல் தி வெரி பெஸ்ட் என்று கூறியுள்ளார் குஷ்பு.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications