திருப்பத்தூரில் மாறிய ஒரு ஓட்டு... தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கே காரணம்.. விஜய்க்கு ஜாக்பாட்
சென்னை: ஐபிஎல் போட்டி நடக்கிறது என்பது பலருக்கும் தெரியும். ஆனால் ஐபிஎல் போட்டிகளைவிட அரசியல் சுவாரஸ்யமாக செல்வதால், பலர் ஐபிஎல் பார்க்கவில்லை தமிழ்நாட்டில்.. ஏனெனில் விஜய் பதவியேற்பாரா இல்லையா என்ற கேள்வி தான் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு ஓட்டின் பலம் சர்கார் படத்தில் விஜய் காட்டியிருப்பார். நிஜத்திலும் நடந்துள்ளது. திருப்பத்தூரில் மாற்றிய ஒரு ஓட்டு... தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கே காரணமாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா. அது ஓரளவு உண்மையும் கூட.. வாருங்கள் இந்த கணக்கினை பார்ப்போம்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இப்போது நடப்பத குதிரை பேர அரசியல், கூட்டணி மாறும் அரசியல் என நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம் அரங்கேறி வருகிறது. இதுவரை திமுக, அதிமுக, பாஜகவினர், தவெகவினர், காங்கிரஸ் கட்சியினர், விசிகவினர் என அனைத்து கட்சியிருமே நினைக்காத விஷயங்கள் நிமிடத்திற்கு நிமிடம் நடப்பதே ஐபிஎல் போட்டிகளை காலி செய்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிந்து கடந்த 4-ந்தேதி முடிவுகள் வெளியாகியது. இதில் விஜய் தலைமையிலான த.வெ.க. 108 தொகுதிகளை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தார். தி.மு.க. தலைமையிலான கூட்டணி 73 இடங்களை தேர்தலில் வென்றத. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றி இருந்தன. ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் இல்லை.
தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை த.வெ.க.விற்கு தந்துள்ளது. இதனால் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 113 ஆக உயர்ந்தது. 113 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. நேற்று இடதுசாரிகள் தவெகவிற்கு ஆதரவு கடிதம் தந்துவிட்டார்கள். இதனால் விஜய் தற்போது சிபிஎம் 2, சிபிஐ கட்சி இரண்டு என 116 எம்எல்ஏக்கள் ஆதரவு விஜய்க்கு கிடைத்துள்ளது.
மறுபக்க திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் உள்ளன. ஒட்டுமொத்தமாக 105 இடங்கள் வருகிறது. பாமக 4 இடங்கள், அமமுக ஒரு இடம், தேமுதிக ஒரு இடம், விசிக ஒரு இடம் என 116 வரும்.. கிட்டத்தட்ட டை என்கிற நிலையை இருக்கிறது. இன்னும் ஒரு சீட் பாஜகவிடம் உள்ளது. இதில் விசிக தவெக பக்கம் போகும் என்கிற நிலை உள்ளது. விசிக உடன் சேர்வதால் 116 என்பது 118 என்கிற தனிப்பெரும்பான்மையை தவெக தொட்டுவிடும். இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தவெக ஒரு ஓட்டில் திருப்பத்தூரில் வென்றது தான் மெஜாரிட்டியை நிரூபிக்க காரணம் ஆகி உள்ளது. இல்லை என்றால் 117 தான் தவெகவிற்கு வரும். அது மெஜாரிட்டிக்கு போதும் என்றாலும் சபாநாயகர் ஓட்டு உள்ளது. அதனால் சிக்கல் ஏற்படும். எனவே திருப்பத்தூரில் ஒரு ஓட்டில் வென்றது தான் தவெக ஆட்சியமைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ஒரு ஓட்டின் முக்கியத்துவம் பலருக்கும் இப்போது புரிந்துள்ளது.














Click it and Unblock the Notifications