பரபரத்த தலைமை செயலகம்.. நுழைவாயிலில் படமெடுத்த நல்ல பாம்பு.. அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்!
தலைமை செயலகத்துக்குள் நுழைந்த பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது
Recommended Video
சென்னை: தலைமைச் செயலக வளாகத்தில் நல்ல பாம்பு புகுந்துவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புதருக்குள் நுழைந்துவிட்ட அந்த பாம்பினை, தீயணைப்பு வீரர்கள் படாதபாடு பட்டு பிடித்துவிட்டனர்.
பொதுவாக தலைமை செயலக வளாகத்துக்குள் அடிக்கடி பாம்புகள் வந்துவிடும். அனல் தெறிக்கும் விவாதங்கள் உள்ளே நடைபெற்று கொண்டிருந்தபோதும், அங்குள்ள நுழைவு வாயில்களில் பாம்புகள் ஊர்ந்து செல்வது நிகழும்.

தலைமை செயலகம் சுற்றிலும் நிறைய மரங்கள், புதர்கள் உள்ளதால் இப்படி பாம்புகள் உள்ளே நுழைந்துவிடுவதாக கூறப்படுகிறது. இதனால் தலைமை செயலக ஊழியர்களிடையே அடிக்கடி பரபரப்பும், பீதியும் ஏற்பட்டு விடும்.
இன்றும்கூட தலைமை செயலக வளாகத்தில் பாம்பு புகுந்துவிட்டது. 4-வது நுழைவாயிலில் படமெடுத்தபடி ஒரு நல்ல பாம்பு படுத்து கிடந்ததை கண்டதும், ஊழியர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த நல்ல பாம்பு அங்குள்ள புதருக்குள் நுழைந்துவிட்டதால், அதனை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக இறங்கினர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பாம்பினை வீரர்கள் பிடித்து கொண்டு போனார்கள். இதன்பின்னரே, அங்கு பரபரப்பு சூழல் தணிந்து இயல்பு நிலை திரும்பியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications