கிளுகிளுப்பாக பேசி மசாஜ்க்கு அழைக்கும் பெண்கள்.. நுங்கம்பாக்கம் அடுக்குமாடி.. உள்ளே போனால்!
சென்னை: செல்போனில் இனிய குரலில் கிளுகிளுப்பாக பேசி மசாஜ் செய்ய வருமாறு பெண்கள் அழைத்த நிலையில், அதை நம்பி போன இளைஞர்கள்.. அடியும் வாங்கி, பணத்தை பறிகொடுத்துவிட்டு வந்திருக்கிறார்கள். இது தொடர்பான புகாரில் தனிப்படை போலீசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
சென்னையில் மசாஜ் என்ற பெயரில், சிலர் கும்பலாக சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள். அதுவும் எப்படி என்றால், இனிமையான குரலில், பெண்களை கிளுகிளுப்பாக பேச வைக்கிறார்கள்.இந்த கும்பலில் ஏராளமான ஆண்கள் பெண்கள் பணியாற்றுகிறார்கள்.

கம்மியான காசு கொடுத்தால் போதும்.. தரமாக மசாஜ் செய்கிறோம், மிக அழகான இளம்பெண்கள் மசாஜ் செய்வார்கள். மசாஜ் மட்டும் அல்ல, தேவைப்பட்டால் அவர்கள் உங்களை உல்லாச உலகத்துக்கும் அழைத்து செல்லலாம் என்று இனிமையான குரலில் பெண்கள் கிளுகிளுப்பாக பேசுவார்கள்.
இதை நம்பும் ஆண்கள் சபலத்துடன் எங்கு வர வேண்டும் என்று கேட்பார்கள். அப்படி கேட்டால், இன்னொரு பெண் பேசுவார். ஒரு முகவரியை கொடுத்து அங்கு வரச்சொல்வார். அங்கு ஆசையோடு செல்வோருக்கு, இளம்பெண்களுக்கு பதில், ஜிம் பாய்ஸ் போல், இளைஞர்கள் கும்பலாக இருப்பார்கள். அவர்கள் உங்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதுடன், நகை அணிந்திருந்தால் அதை பறித்து விடுவார்கள். சத்தம் போட்டால், கத்தியை கழுத்தில் வைத்து சம்பவம் செய்யவும் தயங்க மாட்டார்கள்.
ஒரு அறையில் கொண்டு போய் அடைத்து அனைத்தையும் பறித்துக் கொண்டு ஏமாற்றிவிடுவார்கள். சபலத்துக்கு ஆசைப்பட்டு போனவருக்கு புகார் கொடுத்தால் அசிங்கம் என்று நினைத்து பலர் விட்டுவிடுகிறார்கள். ஆனால் சாப்ட்வேர் என்ஜினீயர் சென்னை நுங்கம்பாக்கத்தில் தனக்கு நடந்த சம்பவத்தை புகாராக அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக போலீசார் கூறும் போது, நுங்கம்பாக்கம் கோபால் நகரைச் சேர்ந்தவர் 29 வயதாகும் ராம்குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் சாப்ட்வேர் என்ஜினியராக வேலை செய்கிறார். இவருக்கு மொபைலில் இனிய குரலில் பேசி, மசாஜ் செய்கிறோம், வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளளது. எங்கு வரவேண்டும் என்று ராம்குமார் கேட்டிருக்கிறார். உடனே, நுங்கம்பாக்கம், குமரப்பா தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு வாருங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
இதையடுத்து அங்கு சென்ற ராம்குமாரை ஒரு அறையில் அடைத்து வைத்து, கத்தி முனையில் மிரட்டியிருக்கிறார்கள். அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் ரூ.4 ஆயிரம் ரொக்கப்பணத்தை கொள்ளை அடித்ததுடன்இ கிரெடிட் கார்டை பிடுங்கி அதன் மூலம் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்தையும் பறித்திருக்கிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து ராம்குமார் நுங்கம்பாக்கம் போலீசிடம் புகார் கொடுத்தார். போலீஸ் படையினர் குமரப்பா தெருவில் உள்ள குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டுக்கு சென்றால், அந்த வீட்டில் இருந்த கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த மசாஜ் கொள்ளையர்களை கைது செய்யும்படி, போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.
கூடுதல் கமிஷனர் பிரேம்ஆனந்த் சின்கா, துணை கமிஷனர் தேஷ்முக், உதவி கமிஷனர் ரவிஅபிராம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர்கள் சேட்டு, சுதா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக தேடினர்
இந்நிலையில் மசாஜ் கொள்ளை கும்பலைச் சேர்ந்த கோவை கார்த்திகேயன் (23), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த விக்கி (24) ஆகிய இருவர் மட்டும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.55 ஆயிரம் மற்றும் தங்க நகைகள் மட்டும் மீட்கப்பட்டது. இந்த கும்பலை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications