வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு 30 ஆண்டுக்கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. மலைவாழ் சங்கம் வரவேற்பு
சென்னை: தருமபுரி வாச்சாத்தி மலைகிராம மக்கள் மீதான வன்முறை தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்நிலையில் இந்த தீர்ப்பு 30 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கூறியுள்ளது.
தருமபுரி மாவட்டம், ஆரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கல்வராயன் மலை தொடரின் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலை கிராமம். இந்த கிராமத்தில், 1992ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதி சந்தனமரம் வெட்டி, கடத்தல் மற்றும் விற்பனை செய்வதாக கூறி 155 வனத்துறையினர், 108 காவல்துறையினர், 6 வருவாய் துறையினர் என 269 பேர் உள்ளடங்கிய குழுவினர், அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்டனர்.

இது தொடர்பாக 90 பெண்கள் உள்ளிட்ட 133 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் கிராம மக்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது. 18 மலை வாழ் பெண்கள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் ஆரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ யிடம் ஒப்படைக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்கள் 1993ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 1995ஆம் ஆண்டு சிபிஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வனத்துறையை சேர்ந்த 155 பேர்,காவல்துறையை சேர்ந்த 108 பேர், வருவாய்த்துறையினர் 6 பேர் என 269 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு கோவை, கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டு கடந்த 2008ம் ஆண்டில் தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 269 பேரில்,தீர்ப்பு வழங்கிய நாளன்று உயிருடன் இருந்த 215 பேரும் குற்றவாளிகள் என கடந்த 2011ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. குற்றவாளிகளில் 12பேருக்கு 10 ஆண்டுகள் சிறையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறையும், மற்றவர்களுக்கு 1-3ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தாக்கல் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். இந்நிலையில் இந்த தீர்ப்பு 30 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

இது குறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு கூறுகையில், "இந்த மலை கிராம மக்களின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. இந்த கொடூரத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் சங்கமும் சுமார் 19ம் ஆண்டு காலம் நீண்ட நெடிய சட்ட போராட்டத்தை நடத்தியுள்ளது. இதன் விளைவாக குற்றம்சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என்கிற தீர்ப்பை கடந்த 2011ம் ஆண்டு பெற்றோம். சிபிஐ வரலாற்றிலேயே இப்படி ஒரு வழக்கு நடந்தது கிடையாது.
இதனை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீடு செய்தார்கள். மேல்முறையீடு வழக்கு விசாரணை 12 ஆண்டுகளாக நடைபெற்றது. மரியாதைக்குரிய நீதியரசர் வழக்கு விசாரணைக்காக நேரடியாக இந்த மலை கிராமங்களுக்கே வந்து கள ஆய்வை மேற்கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார். முதல் தீர்ப்பு இதே செப்டம்பர் மாதம் 29ம் தேதி கடந்த 2011ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல தற்போது இறுதி தீர்ப்பு இதே தேதியில் தற்போது வந்திருக்கிறது. முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பில் அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ராமானுஜம், அப்போதைய மாவட்ட ஆட்சியர் தசரதன் என மேலும் பல வனத்துறையினர் விடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் குற்றவாளிகளாக இந்த தீர்ப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு, அவர்களது குடும்பங்களுக்கு அரசு பணி ஆகியவை வழங்கப்பட்டிருக்கிறது. இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. ஒதுக்கப்பட்ட மக்களை அரவணைத்து செங்கொடி இயக்கம் ஏறத்தாழ 30 ஆண்டு காலமாக தொடர் சட்டப் போராட்டத்தை நடத்தி இந்த தீர்ப்பை பெற்றிருக்கிறோம். தமிழக முதலமைச்சரும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள இழப்பீடு மற்றும் அரசு பணி போன்ற நிவாரணங்கள் விரைந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த தீர்ப்பு தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பழங்குடி மக்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications