நீங்கதான் காவலரா? ஒரே ஒரு வீடியோ.. மோடியிடம் கேள்வி கேட்கும் இளைஞர்.. செம வைரல்!
பிரதமர் மோடிக்கு எதிராக இளைஞர் ஒருவர் தொலைக்காட்சியில் பேசிய வீடியோ பெரிய வைரல் ஆகி உள்ளது.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடிக்கு எதிராக இளைஞர் ஒருவர் தொலைக்காட்சியில் பேசிய வீடியோ பெரிய வைரல் ஆகி உள்ளது. இணையம் முழுக்க இந்த வீடியோ குறித்து விவாதம் செய்யப்பட்டு வருகிறது.
டிவிட்டரில் பாஜக வித்தியாசமான பிரச்சாரம் ஒன்றை செய்து வருகிறது. பிரதமர் மோடி உட்பட பாஜக தலைவர்கள் எல்லோரும் தங்கள் பெயருக்கு முன்னாள் காவலர் (chowkidar) என்ற வார்த்தையை சேர்த்துக் கொள்கிறார்கள்.
நாங்கள்தான் நாட்டின் காவலர் என்று கூறுவதற்காக இவர்கள் இப்படி பெயருக்கு முன் காவலர் என்பதை சேர்த்துக் கொள்கிறார்கள். இதுகுறித்து இளைஞர் ஒருவர் செய்த விமர்சனம் பெரிய வைரலாகி உள்ளது.

இந்தி தொலைக்காட்சி
நேற்று முதல்நாள் தனியார் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் அந்த விவாதம் நடந்தது. அதில் சில பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்பது போல இந்த விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் மாணவர் ஒருவர் கேள்வி கேட்கும் நிகழ்வுதான் பெரிய வைரலாகி உள்ளது.
|
என்ன கேட்டார்
அந்த மாணவர் பாஜக தலைவர்களை நோக்கி இந்தியில் பேசியதன் தமிழ் சாராம்சம் இதுதான், பிரதமர் மோடி எங்களை பக்கோடா விற்க சொல்கிறார். அவரை அவரே ஊர்காவலர் (chowkidar) என்று சொல்லிக்கொள்கிறார். எங்களுக்கு காவலன்தான் வேண்டும் என்றால் நாங்கள் நேப்பாளில் இருந்து கூர்க்காவை வரவழைத்துக் கொள்வோம். அங்கு நிறைய கூர்க்காக்கள் இருக்கிறார்கள்.

மோடி
ஆனால் எங்களுக்கு ஊர்காவலர் தேவை இல்லை. எங்களுக்கு தேவை ஒரு பிரதமர்தான். முன்னாள் ஆட்சி செய்தவர்கள் எல்லோரும் நாட்டை சீரழித்துவிட்டார்கள் என்று மோடி கூறுகிறார். ஆனால் அவர் பிறப்பதற்கு முன்னே பாபா அணு ஆராய்ச்சி நிலையம் உள்ளது. மோடி வீட்டில் கோலி விளையாடும் போது பக்ரா நங்கல் அணை முன்னாள் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது என்பதை அவர் மறக்க கூடாது, என்று அந்த இளைஞர் பேசி இருக்கிறார்.

வைரல்
இந்த இளைஞர் பேசும் வீடியோ பெரிய வைரலாகி இருக்கிறது. மக்களின் குரலாக இவர் பேசுகிறார் என்று பலர் இதை ஷேர் செய்து வருகிறார்கள். பாஜகவினர் சிலர் இவரின் வீடியோவிற்கு பதில் அளித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications