ஆரம்பமே அமர்க்களம்! 108 இடங்களின் நாயகன் விஜய்க்கு கம்யூனிஸ்டு கட்சி கொடுத்த சர்ப்ரைஸ் சர்டிபிகேட்
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று சட்டசபை கூட்டம் தொடங்கியிருக்கும் நேரத்தில், கம்யூனிஸ்டு கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன் முதல்வர் விஜயை காமராஜர், அண்ணா உறவோடு ஒப்பிட்டு பாராட்டியது சட்டசபை வளாகத்திலேயே பேசுபொருளாக மாறியது.. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்கும் கம்யூனிஸ்டு கட்சி இந்த அளவிற்கு விஜயை வரலாற்று ஒப்பீட்டுடன் பாராட்டியது கூட்டணி அரசியலின் புதிய கோணத்தை காட்டுகிறது..
தமிழகத்தில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள நிலையில், சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. முதல் நிகழ்வாக சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு நடைபெற்றது.. யாரும் போட்டியிடாததால் சபாநாயகராக ஜேசிடி பிரபாகரனும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்..

செங்கோட்டையன் - உதயநிதி ஸ்டாலின்
மரபுபடி அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஜேசிடி பிரபாகரனின் இரு கைகளையும் பிடித்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர்.. அதைத் தொடர்ந்து முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் உள்பட சட்டமன்ற கட்சித் தலைவர்கள் புதிய சபாநாயகரை வாழ்த்திப் பேசினர்.
சபாநாயகர் தேர்வை தொடர்ந்து நடைபெற்ற வாழ்த்துரைகளின் போது ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்தனர்..
முதல் நாள் வாழ்த்துரைகள்
புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் அவை நடவடிக்கைகள் மீது உறுப்பினர்களும் அதிகாரிகளும் அதிக கவனம் செலுத்தினர்.
குறிப்பாக பல கட்சித் தலைவர்கள் ஒரே மேடையில் இணக்கமான சூழலில் பேசியது அவையில் கவனத்தை ஈர்த்தது.. முதல் நாளிலேயே கடுமையான விவாதங்கள் இல்லாமல் வாழ்த்துரைகள் மற்றும் மரியாதை நிகழ்வுகள் நடைபெற்றதால் சட்டசபை வளாகத்தில் அமைதியான சூழல் காணப்பட்டது..
கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன்
இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன் பேசியது அனைவராலும் உற்று கவனிக்கப்பட்டது.. "காமராஜரை சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்றது போல, திமுக தலைவர், மதிமுக பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் தலைவர், பாமக தலைவர், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர், இடதுசாரி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று புதிய சகாப்தத்தை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டை முதல்-அமைச்சர் விஜய் பாதுகாத்து இருக்கிறார். மூன்று முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு ஆரம்பமே அமர்க்களப்படுத்தியுள்ளார் என்று கூறினார்.
ஆரம்பமே அமர்க்களம்
ராமச்சந்திரனின் இந்த வாழ்த்துரை சபையில் கைதட்டல் பெற்றது.. அதுமட்டுமல்ல கம்யூனிஸ்டு கட்சி எம்எல்ஏ ஒருவர் படத்துறை பின்னணி கொண்ட முதல்வரை இந்த அளவிற்கு வரலாற்று ஒப்பீட்டுடன் பாராட்டியது அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. காமராஜர், அண்ணா உறவை நினைவுபடுத்தும் விதத்தில் விஜயை ஒப்பிட்டது கூட்டணி அரசியலின் இன்றைய சூழலை தெளிவாக காட்டுகிறது.
சட்டசபை முதல் நாளிலேயே சபாநாயகர் தேர்வு, கட்சிகளின் வாழ்த்துரைகள் என பரபரப்பாக நடந்து முடிந்த நிலையில், அடுத்தடுத்த அவை நடவடிக்கைகள் எப்படி செல்லும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.. புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் என்பதால் முதல் கூட்டத் தொடரின் ஒவ்வொரு நிகழ்வும் உறுப்பினர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டு வருகிறது...!!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications