சென்னை ராயபுரத்தில் சாலையில் 10 அடிக்கு திடீர் பள்ளம்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
சென்னை: சென்னை ராயபுரம் சூரிய நாராயண சாலையில் சாலையில் திடீரென்று 10 அடியில் பள்ளம் ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் அவ்வப்போது சில இடங்களில் திடீரென 10 அடி அல்லது 15 அடி திடீர் திடீரென பள்ளம் ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் தூதரகத்தை ஒட்டி பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் பேருந்து ஒன்று சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை அருகில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. கடந்த 3 வாரத்திற்கு முன்பு சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது

இந்நிலையில் இன்று மாலை சென்னை ராயபுரம் சூரிய நாராயண சாலையில் சாலையில் திடீரென்று 10 அடியில் பள்ளம் ஏற்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட கழிவு நீர் வழிதடத்தில் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் திடீரென்று பள்ளம் ஏற்பட்டதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். பள்ளத்தை மூடுவது தொடர்பாக மாநகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து பள்ளத்தை மூடுவது தொடர்பான பணிகளை மேற்கொண்டனர். ஜேசிபி இயந்திரம் மூலமாக பள்ளத்தை சீரமைக்கும் பணி நடைபெற்றது.
-
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications