ஃபோனில் ராமதாஸ் சொன்ன அந்த ஒரு வார்த்தை... உடனே பதில் தந்த ஸ்டாலின்.. திமுக கூட்டணியில் மாற்றம்?
சென்னை: விரைவில் தேர்தல் வரப்போகிறது.. ஆனால், இதுவரை கண்டிராத ஒரு புதிய அரசியல் கணக்கை நோக்கி களம் நகர்ந்து கொண்டிருக்கிறது... வழக்கமான இருமுனைப் போட்டி என்பது மாறி, இப்போது பலமுனை போட்டிகளுக்கான சான்ஸ் நிறைய தென்படுகிறது.. இப்படிப்பட்ட சூழலில் தமிழக அரசியலில் கிங் மேக்கராக திகழ்ந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் தற்போதைய நகர்வுகள் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.. கூட்டணி தொடர்பாக அவர் என்ன முடிவு எடுக்க போகிறார்???
இதுவரை இல்லாதவகையில், ஒரு விசித்திரமான சங்கடத்தில் பாமக சிக்கியுள்ளது... அன்புமணி ராமதாஸ் தரப்பு ஏற்கனவே அதிமுக, பாஜகவுடன் சேர்ந்துவிட்ட நிலையில், டாக்டர் ராமதாஸ் தலைமையிலான இன்னொரு தரப்பு தனித்து விடப்பட்டுள்ளது.

எடப்பாடி கறார்
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு காட்டும் பிடிவாதம், பாஜகவுடனான நெருக்கம் காரணமாக, ராமதாஸ் தரப்புக்கு அங்கு கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன.
அதேபோல திமுக கூட்டணியில் விசிகவின் நேரடி எதிர்ப்பு மற்றும் பழைய கசப்பான சம்பவங்கள் காரணமாக ஆரம்பத்திலிருந்தே ராமதாஸுக்கு இடம் மறுக்கப்பட்டு வருகிறது.. இப்படியொரு இக்கட்டான நிலையில்தான் டாக்டர் ராமதாஸ் தற்போது சிக்கி உள்ளார்..
திமுக கூட்டணி - தைலாபுரம் ஆலோசனை
அடுத்து என்ன செய்வதென்று மகள் ஸ்ரீ காந்தி, கட்சியின் சீனியர் தலைவர் ஜி.கே. மணி ஆகியோருடன் தீவிர ஆலோசனைகளை ராமதாஸ் மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.. பாமகவின் கோட்டையாகக் கருதப்படும் வட மாவட்டங்களில் மட்டும் தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிப்பதா அல்லது தவெகவுடன் கூட்டணி அமைப்பதா என்ற விவாதங்களும் நடந்ததாக தெரிகிறது..
ஆனால், இப்போதைய சூழலில் தனித்து போட்டியிடுவது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால், நிர்வாகிகள் அதற்கு பச்சைக்கொடி காட்டவில்லை...
அதனால் கடைசியாக ஒருமுறை திமுக கூட்டணியில் இணையும் முயற்சிக்கு தைலாபுரம் தரப்பு வந்துள்ளதாம்.. ஒருவேளை அது முடியாத பட்சத்தில் தவெக பக்கம் செல்வது என்றும் முடிவை எடுத்துள்ளதாம்..
டாக்டர் அய்யா ராமதாஸ் உருக்கம்
இந்நிலையில்தான், திமுகவின் முக்கிய புள்ளி ஒருவரின் மூலமாக முதல்வர் ஸ்டாலினுடன் டாக்டர் ராமதாஸ் போனில் பேசியதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது..
தன்னுடைய நீண்டகால அரசியல் அனுபவத்தை முன்வைத்த ராமதாஸ், "இது எனது அரசியல் வாழ்வின் மிக முக்கியமான தேர்தல்.. ஒருவேளை இது கடைசி தேர்தலாகவும் இருக்கலாம்" என்று உருக்கமாக சொல்லி, ஒரு கவுரவமான தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தாராம்..
பாமக ராமதாஸ் நம்பிக்கை
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், இப்போது காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு முதற்கட்ட நிலையில் இருப்பதால், அது முடிந்ததுமே புதிய கட்சிகளை சேர்ப்பது குறித்துத் தெளிவான முடிவெடுக்க முடியும் என்று பதிலளித்தாராம்..
அந்தவகையில், திமுக கூட்டணிக்காக டாக்டர் அய்யா பெருத்த நம்பிக்கையுடன் காத்து கொண்டிருப்பதாக தெரிகிறது..
திமுகவுடன் கூட்டணி வைக்க ராமதாஸ் மட்டுமல்ல, தேமுதிகவும் 10 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை இடம் என்ற கோரிக்கையுடன் காத்து கொண்டிருப்பதாக தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமி சேர்த்து கொள்ள முடியாது என்று படாரென்று சொல்லிவிட்டதால், திமுக பக்கம் நகர ஓபிஎஸ்ஸும் காத்து கொண்டிருக்கிறாராம்..
கனிமொழி சொன்ன வார்த்தை
நேற்று முன்தினம் எம்பி கனிமொழி பேசும்போது, திமுக கூட்டணியில் நிச்சயமாக புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளதாக கூறியிருந்தார்.. அப்படியானால் வேறு சில கட்சிகள் திமுக கூட்டணிக்குள் வரப்போகிறதா என்றும் தெரியவில்லை..
ஓபிஎஸ், ராமதாஸ், பிரேமலதா என பலரும் வரிசைக்கட்டி திமுக பக்கம் நிற்க, செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்களின் திரைமறைவு முயற்சிகளால், தமிழக அரசியலில் இன்னும் ஒரு சில வாரங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் நடக்கக்கூடும் என்றே தெரிகிறது..
வன்னியர் சமூக வாக்குகள்
தமிழகத்தின் வன்னியர் சமூக வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் ராமதாஸின் இந்த நகர்வு, திமுக கூடுதல் பலம் சேர்க்குமா அல்லது தவெக போன்ற புதிய சக்திகளுக்கு வழிவகுக்குமா என்பது தெரியவில்லை..
அதேபோல ஓபிஎஸ் வைத்துள்ள 2% முதல் 4% வாக்கு வங்கியும், தேமுதிக வைத்துள்ள 3 சதவீத வாக்கு வங்கியும் யாருக்கு சாதகமாக போகப்போகிறது என்றும் தெரியவில்லை.. அடுத்த 2 வாரங்களில் வெளியாகப்போகும் கூட்டணி அறிவிப்புகள்தான், தமிழகத்தின் அடுத்த 5 ஆண்டு அரசியலை தீர்மானிக்கும்.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சினிமாவில் சிகரெட் தடை டூ ‘மாற்றம் முன்னேற்றம்’ வரை - 2016இல் அன்புமணி செய்த கார்ப்பரேட் பிரச்சாரம் -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
விஜய்க்கு எதிராக களமிறங்கும் பாமக.. தேர்தலில் போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? எடப்பாடி அறிவிப்பு -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்!












Click it and Unblock the Notifications