எதாவது பண்ணுங்க.. கஷ்டமாக இருக்கு.. அமித் ஷா கடைக்கண் பட.. மாறி மாறி போனை போட்ட புள்ளி.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ள நிலையில் அவரை சந்திக்க மூத்த தலைவர் ஒருவர் மாறி மாறி போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசியலில் இன்று முக்கியமான நாள். உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ள நிலையில் அவர் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட உள்ளார். முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க உள்ளார்.

amit shah annamalai Edappadi Palaniswami

அமித் ஷாவின் பயணத்தில் பின்வரும் சம்பவங்கள் நடக்க உள்ளன

1. இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான அமித் ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இன்று அவர் பல சந்திப்புகளை ஆலோசனைகளை, கூட்டங்களை நடத்த உள்ளார்.

2. முக்கியமாக பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது. 2023ல் அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை.. பாஜக தமிழக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என கட்சிக்கு நெருக்கமான வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாமலை இருந்தால் கூட்டணி அமைவது கஷ்டம் என்று டெல்லி இந்த முடிவை எடுக்கலாம் என்று கூறப்படுகிறது. அண்ணாமலையின் சமீபத்திய பேட்டிகளும் கூட இதை உணர்த்துவதாகவே இருக்கின்றன. இன்னும் 2 வாரங்களில் நான் சாதாரண ஆளாக இருக்கலாம் என்றும் கூட அண்ணாமலை இக்கு வைத்து பேசி உள்ளார். அதோடு தலைவர் போட்டியில் நான் இல்லை என்றும் அண்ணாமலை நேற்று அறிவித்துவிட்டார். இதனால் இன்று அமித் ஷா தலைமையில் பாஜக புதிய மாநிலத் தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படுகிறது.

3. அதிமுக கூட்டணி மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கும் விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

4. தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை இன்று(ஏப். 11) சந்திக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமித் ஷாவை சந்திப்பது உறுதியாகியுள்ளது.

5. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா இடையே நடந்த மீட்டிங்கில், தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று கோவையில் அமித் ஷா, 2026-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டணி கணக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மாநிலத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமித் ஷா - நிர்வாகிகள் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

6. முக்கியமாக சென்னை கிண்டியில் காலை 11 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சந்திப்பிற்கு பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய தலைவர் முயற்சி

உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்துள்ள நிலையில் அவரை சந்திக்க மூத்த தலைவர் ஒருவர் மாறி மாறி போன் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது அரசியலில் கொஞ்சம் பவர் மங்கி இருக்கும் அந்த தலைவர் அமித் ஷாவை சந்திக்க சென்னை பிரமுகர் ஒருவர் மூலம் முயன்று உள்ளார்.

டெல்லியில் சந்திக்க நேரம் தரப்படவில்லை. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கவும் நேரம் தரப்படவில்லை. மோடி தமிழ்நாடு வந்த போது நேரம் கேட்டேன். கிடைக்கவில்லை. இப்போது தமிழ்நாடு வந்துள்ள அமித் ஷாவையாவது சந்திக்க நேரம் தர வேண்டும்.. ஏற்பாடு செய்து தாருங்கள்.. எதாவது பண்ணுங்க.. கஷ்டமாக இருக்கு. என்று அந்த புள்ளி கேட்டுள்ளார். ஆனால் இந்த சந்திப்பிற்கு இதுவரை அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+