"டெட்லி ப்யூட்டி".. கணிப்பு மட்டும் பொய்யானால் நல்லது.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுக்கும் வார்னிங்!
சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது சென்னையில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் முதல் மாலை வரை மிக அதிக கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழ்நாடு நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 170 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கே 170 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இன்று மாலை இந்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எங்கே கடக்கும்?
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள கணிப்பில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் - வடசென்னைக்கும் இடையில் கரையை கடக்கும். இதனால் இன்று மதியத்தில் இருந்து மாலை வரை மிக அதிக கனமழை பெய்யும். மிகப்பெரிய பந்து போன்ற வடிவம் கொண்ட மழை மேகங்கள் உருவாகி உள்ளது. தாழ்வு மண்டலத்தின் மையத்தில் இது உள்ளது.

பந்து
தாழ்வு மண்டலத்தின் வெளிப்புற மேகங்கள் சென்னையில் தற்போது உள்ளது. மழை மேகங்கள் நிறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மத்திய பகுதி சென்னைக்கு அருகில் வந்ததும் மழை மிக மிக அதிகமாக இருக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னையில் இன்று மதியம் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்பின் மழை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மிக அதிகம்
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 50 கிமீ ஆக இருக்கும். பலத்த காற்றுதான் மிகப்பெரிய சிக்கலாக இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் நேரத்தில் பெய்ய கூடிய மிக அதிக கனமழைதான் ஆபத்தானதாக இருக்கும்.
Recommended Video

ஆபத்து
எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். இந்த தாழ்வு மண்டலம் ஆபத்து நிறைந்த அழகான ஒரு பந்து போல மேற்கு/ வடமேற்கு பகுதியில் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது. ஆபத்தான விஷயங்கள் எல்லாமே அழகாகத்தான் இருக்கிறது. சோதனையான 18 மணி நேரங்கள் வர போகிறது.. இந்த கணிப்பு மட்டும் பொய்யானால் நல்லதாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை பிரதீப் ஜான் விடுத்துள்ளார்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications