ஒரு டன் வெள்ளி; 28 கிலோ தங்கம், 10,500 புடவைகள்! இந்தியாவின் பணக்கார நடிகை ஜெ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே போன்ற பிரபல பாலிவுட் நடிகைகளைவிட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்தியாவிலேயே பணக்கார நடிகை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைந்து 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. இறக்கும்போது அவருக்கு 68 வயது. சினிமா புகழ் மூலம் அரசியலுக்கு வந்த ஜெயலலிதா, இந்திய அளவில் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக சாகும் வரை இருந்தார். எம்.ஜி.ஆரால் அரசியல் வாழ்க்கைக்கு அழைத்துவரப்பட்ட இவர், அஇஅதிமுகவில் 1982 ஆம் வருடம் கட்சியில் இணைந்தார். அதன்பின்னர் ஒரே ஆண்டில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். 1984இல் மாநிலங்களவை உறுப்பினரானார்.

Jayalalithaa Aiadmk

ஜெயலலிதா முதன்முதலாகக் கன்னடப் படம் 'ஸ்ரீஷைல மகாத்மே’ மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானபோது அவரது வயது 13. இந்தப் படம் 1961இல் வெளியானது. அதன்பின்னர் 4 ஆண்டுகள் கழித்து வெளியான 'வெண்ணிற ஆடை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவரை அறிமுகப்படுத்திய பெருமை இயக்குநர் ஸ்ரீதரையே சேரும்.

நாவல் இலக்கியத்தில் எப்படி 'வெண்ணிற இரவுகள்' தஸ்தயேவ்ஸ்கியை உலகம் அறியச் செய்ததே அதேபோல் இந்தப் படம் ஜெயலலிதாவை இந்தியா முழுக்க புகழ் பெற வைத்தது. 1961இல் தொடங்கிய ஜெயலலிதாவின் திரை வாழ்க்கை 1980வரை இடவிடாமல் பரபரப்பாக இருந்தது. தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என 140 படங்களில் நடித்தார்.

இவரது அம்மா சந்தியாவும் திரைப்பட நடிகை. ஆகவே, சிறுவயதிலிருந்தே முறையாக நாட்டியம், இசை என ஜெயலலிதாவுக்கு ஈடுபாடு இருந்தது. திரை உலகில் அறிமுகமான பிறகு இவர் கலைச்செல்வி என்று அடைமொழி போட்டு அழைக்கப்பட்டார். நட்சத்திர தாரகை என்றும் இவரை ரசிகர்கள் அழைத்தனர். எம்.ஜி.ஆரில் ஆரம்பித்து என்.டி.ராமராவ் வரை, சிவாஜியில் தொடங்கி தர்மேந்திரா வரை இவருடன் நடிக்காத நடிகர்களே இல்லை என்ற அளவில் புகழ்பெற்ற கதாநாயகியாக வலம் வந்தவர் ஜெயலலிதா.

இதன் மூலம் அவர் வாழ்வில் பண மழை கொட்டியது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார நடிகை ஜெயலலிதாதான் என்று டிஎன்ஏ இந்தியா ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. இவரிடம் சுமார் 1 டன் வெள்ளி இருந்தது என்றும் 28 கிலோ தங்கம் இருந்து என்றும் அச்செய்தியில் தகவல் இடம்பெற்று. 1991 முதல் 96வரை இவர் முதல்வராகப் பதவியேற்ற போது தனது ஊதியமாக வெறும் ஒரு ரூபாயே பெற்றார். அதனால் இவர் மீதும் அவரது அமைச்சர்கள் மீதும் பல ஊழல் புகார்கள் கிளம்பினர். எனவே அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்ட போது சுமார் 10000 புடவைகள், நூற்றுக்கணக்கான விதவிதமான செருப்புகள் வைத்திருந்தது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. அதன்படிப் பார்த்தல் இன்றைக்குப் புகழ்பெற்றுள்ள ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே, பிரியங்கா, ரேகா ஆகிய நடிகைகளைவிட ஜெயலலிதா மிகப்பெரிய பணக்கார நடிகை என்கிறது டிஎன்ஏ.

ஆகவே ஜெயலலிதா இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நடிகை என்றும் 1997ஆம் ஆண்டு இவருடைய போயஸ் கார்டன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, அவரின் சொத்து 900 கோடி ரூபாய் என்றும் மேலும் 10,500 புடவைகள், 750 ஜோடி செருப்புகள், 91 டிசைன் டிசைனாக வாட்சிகள், 1250 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், ஆடம்பர கார்கள் என்று அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய தேதியில் ஐஸ்வர்யா ராய்க்கு சுமார் 830 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளார். தீபிகா மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் 500 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர். ஆனால் 1997லேயே ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.900 கோடி என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். ஆகவே ​​ஜெயலலிதாவின் சொத்து மதிப்புடன் ஒப்பிடுகையில் இன்றைக்கும் கூட ஐஸ்வர்யா, தீபிகாவின் சொத்து குறைவாகவே உள்ளது.

ஊழல் வழக்குகளில் சிக்கிய ஜெயலலிதா 2001 மற்றும் 2011 என இரண்டு முறை நீதிமன்ற உத்தரவால் பதவியைப் பறிகொடுத்தார். அதன் பின்னர் மீண்டும் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார் ஜெயலலிதா. அந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே இவர் மறைந்துவிட்டார். இவரது வீட்டில் 44 ஏசிகள், 33 தொலைபேசிகள், 131 சூட்கேஸ்கள், 27 சுவர் கடிகாரங்கள், 86 ஃபேன்கள்கள், 146 ஆடம்பர நாற்காலிகள், 31 டேபிள்கள், 34 டீப்பாய்கள், 24 கட்டில்கள், 81 தொங்கும் விளக்குகள், 20 ஷோபாக்கள் என பல கோடி மதிப்பிலான 14 ஆயிரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைச் சமீபத்தில் நீதிமன்றம் ஏலம் விடும்படி உத்தரவிட்டிருந்தது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஏலம் விடக்கூடாது என்று கூறிய பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அப்பொருட்களைத் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+