முதல்வர் விஜய்யின் கடிதத்திற்கு நடுவே சென்னை விமான நிலைய நிர்வாகம் போட்ட ட்வீட்
சென்னை: சென்னை விமான நிலையத்தை 'இந்திய விமான நிலையங்கள் ஆணையம்' (AAI) அல்லாத வேறொரு நிறுவனத்தை நிர்வாகப் பொறுப்பில் அமர்த்துமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது தமிழக அரசு. முதல்வர் விஜய் இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் தற்போது அம்பலமாகி உள்ளது. முதல்வர் விஜய்யின் கடிதத்திற்கு நடுவே சென்னை விமான நிலையம் போட்ட ட்வீட் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்து நாளேடு வெளியிட்ட செய்திகளின் படி, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் விஜய் அனுப்பிய கடிதத்தில், "சென்னை விமான நிலையத்தின் தற்போதைய செயல்பாட்டில் உள்ள சில குறைபாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, விமான நிலைய நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் கடந்த ஆகஸ்டு மாதம் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை விமான நிலையம்
அதில், "தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. தொழில் மற்றும் முதலீட்டு வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உள்கட்டமைப்பும் நிர்வாகமும் முக்கியமானவை. பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய மூன்று அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும். தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு அதற்கேற்ற சிறப்பான விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர்- நிர்வாகமான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தை (Airports Authority of India AAl) மாற்றிவிட்டு வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
டிஆர்பி ராஜா எதிர்ப்பு
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் நடவடிக்கைக்கு திமுக, அமமுக, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. முதல்வர் விஜய் சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருந்து வேறு ஒரு நிறுவனத்தை நிர்வாக பொறுப்பில் அமர்த்த கூறியிருப்பதை பார்த்தால், தனியாரிடம் ஒப்படைக்கக்கூறுவதாக தெரிவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. பரந்தூர் விமான நிலையமும் அரசு மூலமே நிர்வகிக்கப்பட இருந்தது.அதனால் தான் தவெக அரசு ரத்த செய்திருப்பது, இந்த நடவடிக்கைகள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
சென்னை விமான நிலைய ஆணையம் ட்வீட்
இதனிடையே முதல்வர் விஜய்யின் கடிதத்திற்கு நடுவே சென்னை விமான நிலைய ஆணையம், வெளியிட்டுள்ள ஒரு ட்வீட் வீடியோவில், சென்னை விமான நிலைய ஆணையத்தின் கவனிப்பை ஒருவர் வெகுவாக பாராட்டுகிறார். டெல்லியில் இருந்து வந்த பயணி, சென்னை விமான நிலையத்தில் உள்ள விஷயங்களை வெகுவாக பாராட்டி உள்ளார்.
A warm word from a passenger visiting Chennai from Delhi, appreciating the hospitality and the people who make the journey more pleasant. His experience, in his own words, is a reminder that a little warmth can make a difference.#ChennaiAirport #AAIAirports #CabPickupPoint… pic.twitter.com/01vSRx5BIo
— Chennai (MAA) Airport (@aaichnairport) September 19, 2026
அந்த வீடியோவை பதிவிட்டுள்ள சென்னை விமான நிலைய ஆணையம், அதற்கு மேல் கேப்சனாக, "டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்த பயணி ஒருவர், பயணத்தை இனிமையாக்கும் மக்களின் உபசரிப்பையும் நற்பண்புகளையும் பாராட்டித் தெரிவித்துள்ள அன்பான வார்த்தைகள் இவை. ஒரு சிறிய அளவிலான அன்பும் கனிவும் கூட எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு, அவரது அனுபவமே ஒரு சிறந்த சான்றாக அமைகிறது" என்று கூறப்பட்டுள்ளது..


Click it and Unblock the Notifications
