இவ்வளவு எளிமையா! கார், பைக் இல்லை! கையில் இருப்பது வெறும் ரூ.2000தான்! சிபிஎம் வேட்பாளரின் சொத்து
சென்னை: திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆர். சச்சிதானந்தமின் சொத்து மதிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை என 2 லோக்சபா தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் கோவை தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளர் நடராஜன் வெற்றி பெற்றார். அதேபோல் மரை தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளர் சு வெங்கடேசன் வெற்றி பெற்றார்.

இதையடுத்து வரும் லோக்சபா தேர்தலிலும் கடந்த முறையை போலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த முறை மதுரையுடன் கோவைக்கு பதில் திண்டுக்கல் தொகுதி அந்த கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை லோக்சபா தொகுதியில் மீண்டும் சு வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதியில் சச்சினதானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளனர்..
சொத்து மதிப்பு: திண்டுக்கல்லில் சிபிஎம் கட்சி சார்பாக களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆர். சச்சிதானந்தமின் சொத்து மதிப்பு பலரையும் வியக்க வைத்துள்ளது.
இவர் இதுவரை வருமான வரி தாக்கல் செய்யும் அளவிற்கு வருமானம் பெறவில்லை என்பதால் வருமான வரி என்ற பேச்சுக்கே இடமில்லை.
இவரின் கையில் ரொக்கமாக 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது.
எல்லா வங்கிகளையும் சேர்த்து சேமிப்பு 1.30 லட்சம் ரூபாய் உள்ளது.
மொத்தமாக இவரின் சொத்து மதிப்பே 4 லட்சம் ரூபாய்தான்.
10 லட்சம் மதிப்புள்ள இவர் வாங்காத பூர்வீக வேளாண் நிலம் உள்ளது. இது தவிர வேறு பட்டா நிலம் இல்லை.
இவருக்கு மட்டும் கடன் 3.10 லட்சம் ரூபாய் உள்ளது. இவரின் மனைவிக்கு 4.75 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.
இவர் அரசுக்கு செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி நிலுவையோ, வருமான வரி நிலுவையோ எதுவுமே இல்லை.
யார் இவர்: சிபிஎம் கட்சி சார்பாக களமிறக்கப்பட்டுள்ள வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம் மிகவும் எளிமையான பின்னணி கொண்டவர்., 53 வயதான இவர், கடந்த 37 ஆண்டுகளாக கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். அதேபோல, 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார். பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், கடந்த 1987ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில்(SFI) மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர். 1992ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து 1994-2002 வரை மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணை செயலாளராக பணியாற்றியுள்ளார்.
2004-2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த கட்சியின் திண்டுக்கல் தாலுகா செயலாளராகவும், அதன்பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்ட செயலாளர், மாநில துணை செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மக்களிடம் சரியாக அணுகும் முறை, அரசியல் அனுபவம், சிறந்த தலைமை பண்பு ஆகியவை இவரை 26 வயதிலேயே தேர்தலை நோக்கி நகர்த்தியிருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications