யானை குட்டி என்னம்மா ஆடுது.. பெண்களோடு போட்ட அந்த ஸ்டெப் தான் வேறலெவல்.. வீடியோ பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: யானை குட்டி ஒன்று பெண்களுடன் ஆட்டம்போட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

யானைகள் பொதுவாக மனிதர்களுடன் நெருங்கி பழகும் தன்மை உடையவை. யானையை பலருக்கும். இரண்டு பெரிய காதுகள், அகன்ற கால்கள், பெரிய கால்கள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு பயமுறுத்தும் தோற்றம் உடையவை என்றாலும் மதம் பிடிக்கும் காலங்களை தவிர மற்ற நேரங்களில் பரம சாது. நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கும். உங்கள் குழந்தைகள் போல் பழகும்.

A video of a baby elephant playing with girls is being shared by many on social media

பொதுவாக யானைகள் உங்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது பிளிறும். ஆனால் கோபமாக இருக்கும் போது பயங்கர சத்தம் போடும். யானைகள் மக்களுடன் நெருங்கி பழகுவதால் கேரளாவில் இதனை பலரும் வளர்த்தார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரை யானைகள் கோயில்களில் பராமரிக்கப்படுகிறது. வனப்பகுதிகளில் இருக்கிறது. பொதுமக்கள் வளர்ப்பது இல்லை.

யானைகளுக்கு தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை என்று சொல்கிறார்கள். போதிய உணவு கிடைக்காத பட்சத்தில் "டென்ஷன்' ஆகிவிடும். யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம். பொதுவாக மாலையில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும்.

யானையை பற்றி இவ்வளவு தூரம் சொல்லக்காரணம், ஒரு யானை அழகாக நடனம் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.அந்த வீடியோவில் யானை குட்டி ஒன்று அற்புதமாக இரண்டு பெண்களுடன் ஆடுகிறது. அதற்கு பிஜிஎம் ஒன்று போட்டுள்ளார்கள். அந்த பிஜிஎம் பாட்டுவேற லெவலில் இருக்கிறது.

குறிப்பட்ட இரண்டு பெண்கள் எப்படி ஆடுகிறார்களோ, அப்படியே யானை ஆடுகிறது. ஒரு காலை தூக்கி,இன்னொரு காலை இறக்கி பார்க்கவே பிரம்மிக்க வைக்கிறது. யானையின் குறிப்பிட்ட ஸ்டெப் தான் வேறலெவல். எப்போது எடுத்த வீடியோ என்பது தெரியவில்லை. எங்கு எடுத்த வீடியோ என்பதும் தெரியவில்லை. ஆனால் பார்க்க நன்றாக உள்ளது. அந்த வீடியோவை பாருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+