லாக்டவுண் முடியட்டும்.. இதே பஸ்.. இதே டிரைவர்.. ஜாலியா கொடைக்கானலுக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாமா?
மலைப்பாதையில் பேருந்து ஒன்று செல்லும் வீடியோ பீதியைக் கிளப்புகிறது.
சென்னை: எப்போதும் வாட்ஸ் அப், பேஸ்புக் என சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருப்பவர் என்றால், நிச்சயம் பீதி கிளப்பும் அந்த பேருந்து வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
Recommended Video
'லாக்டவுண் முடியட்டும்.. இதே பஸ்.. இதே டிரைவர்.. ஜாலியா கொடைக்கானலுக்கு ஒரு டிரிப் போய்ட்டு வரலாமா?' என்ற கேப்ஷனுடன் வளைய வருகிறது அந்த வீடியோ. அதில் மலைப்பாதை ஒன்றில் பார்க்கும் போதே, வயிற்றில் புளியைக் கரைத்து பீதி கிளப்பும் வகையில் பேருந்து ஒன்று செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சுமார் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக மட்டுமே ஓடும் அந்த வீடியோவில் பேருந்து இந்தப் பக்கமும், அந்தப் பக்கமும் சாயும் போதெல்லாம் பார்க்கும் நமக்கு மனது பதைபதைக்கிறது. நிச்சயம் இந்த டிரைவர் திறமைசாலிதான் என பாராட்ட வைக்கிறது.

நிஜத்தில் அப்படி சாதுர்யமாக குறுகலான மலைப்பாதையில் பொம்மை பேருந்தை திருப்புவதைப் போல் அவ்வளவு பெரிய நிஜ பேருந்தை திருப்பி, திருப்பி எடுப்பது சாத்தியமில்லை என்பது நமது மூளைக்கு உறைத்தாலும், இந்த வீடியோ காட்சிகள் கொஞ்சம் பதறத்தான் வைக்கின்றன.

ஏதாவது ஒரு திரைப்படத்திற்காக அந்த சாகசக் காட்சியை கிராபிக்ஸில் உருவாக்கி இருப்பார்கள் என்றேத் தெரிகிறது. ஆனால் என்ன படம் என்ற விபரம் தெரியவில்லை. லாக்டவுணால் மனம் வெதும்பிக் கிடக்கும் ஏதோ குறும்புக்கார ஆசாமி தான், இந்த வீடியோவை இப்படி ஒரு கேப்ஷனோடு பரப்பி இருக்க வேண்டும்.

எது எப்படியோ லாக்டவுணால் கோடை விடுமுறைக்குக் கூட எங்கும் சுற்றுலாச் செல்ல முடியாமல், வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களுக்கு கொடைக்கானலுக்கு சென்று வரும் ஆசையை இந்த வீடியோ தூண்டி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications