Vijayakanth: எனக்குன்னு ஒரு இடம் கொடுப்பீங்கல்ல.. என்னய்யா காசு காசு.. விஜயகாந்த் உருக்கமான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தொண்டர்கள் முன்னிலையில் உருக்கமாக பேசிய வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. அந்த வீடியோ கல்நெஞ்சையும் கரைத்துவிடும் அளவிற்கு உள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவந்தார். அவரை காப்பாற்ற மருத்துவப் பணியாளர்கள் எவ்வளவே கடின முயற்சி செய்த போதிலும் சிகிச்சை பலனின்றி காலமானார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

A video of late DMDK leader Vijayakanth speaking passionately in front of the volunteers

நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சை பெற்றபடி வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். விஜயகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் மருத்துவமனையில் செய்யப்பட்டு வந்தது. வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த டிசம்பர் 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் .

கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (டிச.28) காலை விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். விஜயகாந்த் மறைவால் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியிலும் தேமுதிக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டுள்ளனர். அவர்கள் கதறி அழுகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விஜகாந்த் பேசிய பழைய எமோசனல் வீடியோ இப்போது வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ கல் நெஞ்சையும் கரைத்துவிடும் வகையில், இருக்கிறது. அதில் விஜயகாந்த் கூறுகையில், எனக்குன்னு ஒரு இடம் கொடுப்பீங்கல்ல. அது இருக்கும் இல்ல.. என் மனைவிக்குன்னு ஒரு இடம் இருக்குன்னு உங்கள் சட்டத்தில் இடம் இருக்குல்ல.. என் புள்ளைக்குன்னு ஒரு இடம் இருக்குமில்ல.. அதுபோதும்.. இங்க இவ்வளவு பேர் இருக்காங்க இல்ல..

நாலு பேரு வந்தா ஒரு நேரம் சோறு போட மாட்டீங்களா.. அதுலேயே முடிஞ்சிரும்.. இத்தனை பேர் வீட்டுக்கு போய் வந்தால் முடிந்துவிடும்.. என்னய்யா.. காசு. காசு.. அடபோங்கயா..நீங்களும் உங்கள் காசும்.. கோடி கோடியாக சேர்த்து வைத்து எங்கய்யா கொண்டு போக போறீங்க.. செத்தால் கூட அரைஞான் கொடியை அறுத்துவிட்டு உள்ளே புதைக்கிறார்கள்" இவ்வாறு விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ வேகமாக பரவி வருகிறது. விஜயகாந்தின் இந்த வீடியோ ட்விட்டரில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+