அப்படியே நடந்து வந்தாரா... திடீர்னு தூக்கிட்டுப் போய்.. என்னாச்சு... பதற வைக்கும் வீடியோ!
சென்னை: வீட்டின் கதவைத் திறக்க வந்த இளைஞரை திறக்கவிடாமல் பேய் ஒன்று தடுக்கும் காட்சிகள் வைரலாகி வருகிறது.
Recommended Video
தொழில்நுட்பங்கள் என்னதான் வளர்ந்து வந்தாலும் பேய், பிசாசு அமானுஷ்யங்களில் மக்களுக்கு நம்பிக்கை இருக்கத்தான் செய்கிறது. தற்போது அதுகுறித்த படங்களும் பிராந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் எடுக்கப்பட்டுத்தான் வருகின்றன.

பாடல்
வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுனு விளையாட போகும்போது சொல்லி வைப்பாங்க.. உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க.. வேலையற்ற மனிதர்களின் மூளையற்ற வார்த்தைகள்.. வேடிக்கையாக கூட நம்பிவிடாதே என பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 1961ஆம் ஆண்டிலேயே பாடி வைத்தார்.

நம்புதல்
எனினும் இன்று நாம் பேய், பிசாசு என்றால் அலறத்தான் செய்வோம். அதற்கேற்ப மூடிக்கிடக்கும் அலுவலகத்தில் பேய் ரிலாஸ், மூடிக் கிடக்கும் கடையில் உள்ள காவலரை அடிக்கும் பேய், வேகமாக வரும் காரின் நடுவில் நிற்கும் பேய் என பல்வேறு வீடியோக்களை பார்க்கும் போது நாம் நம்பிக் கொண்டுதான் இருக்கிறோம்.

பறக்கவிடும் காட்சி
அந்த வகையில் தற்போது ஒரு புதிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் இளைஞர் ஒருவர் வீட்டின் கதவை திறப்பதற்கு செல்கிறார். அப்போது கருப்பு உருவம் ஒன்று அவரை திறக்கவிடாமல் பின்னோக்கி இழுக்கிறது. அவரை இழுத்து பறக்கவிடும் காட்சிகள் பயங்கரமாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

சித்தரிப்பு
இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது, இதன் உண்மைத்தன்மை குறித்து எதுவும் தெரியவில்லை. ஏனெனில் இந்த வீடியோவில் அந்த நபரை அந்த கருப்பு உருவம் சுவர் வழியாக இழுத்து செல்லும் காட்சிகள் நம்பும்படியாக இல்லை. எனவே இந்த வீடியோ உண்மையா, சித்தரிக்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications