ஆஹா.. காதில் தேன் பாயுது.. மழலை குரலில் கண்ணான கண்ணே பாடும் குட்டிப் பாப்பா! வைரல் வீடியோ
Recommended Video
சென்னை: அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படத்தில் உள்ள கண்ணான கண்ணே பாடலை மழலைக் குரலில் ஒரு குழந்தை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
டிக் டாக் எனப்படும் செயலியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆடி பாடுவது, கவிதை சொல்வது , காமெடி செய்வது என தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை முடக்க பெரும்பாலானோர் கோரி வரும் நிலையில் இதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அதில் பிரபலமானால் நடிக்க சென்றுவிடலாம் என்பதால் பலரும் அந்த செயலியில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நீளும் லிஸ்ட்
பெரியவர்களின் திறமைகள் வெளிவருவது ஒருபுறமிருந்தாலும் குழந்தைகளின் சுட்டித்தனங்களும் வீடியோவாக வெளியாகின்றன. இந்த செயலியில் குழந்தைகள் பாட்டு பாடுவதும் நடனம் ஆடுவதும் சேட்டைத்தனம் செய்வதும் என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

விஸ்வாசம் படம்
அந்த வகையில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற "கண்ணான கண்ணே கண்ணான கண்ணே என் மீது சாய வா" என்ற பாடல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த பாடல் மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலை போல் பெண் குழந்தைக்கானது ஆகும்.

திரும்ப திரும்ப
இந்த கண்ணான கண்ணே பாடலை ஒரு சிறிய குழந்தை தனது மழலை குரலில் பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அதுவும் பாட்டை பாடி முடித்துவிட்டு அந்த குழந்தை படும் வெட்கத்தை பார்க்கவே திரும்ப திரும்ப வீடியோவை பார்க்கத் தூண்டுகிறது.

அற்புதம்
இந்த வீடியோவை தற்போது வரை 7.9 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஏராளமானோர் லைக்ஸ் கொடுத்துள்ளனர். அதிலும் ஜாம்பவான் பாடகி போல் ராகத்துடன் கையசைக்கும் காட்சிகளும் அற்புதம். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications